Vikram box office collection day 16: மிரட்டும் வெற்றி.. கொட்டும் கோடிகள்.. விக்ரம் படத்தின் 16ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விக்ரம் திரைப்படத்தின் 16 ஆம் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
விக்ரம் திரைப்படத்தின் 16 ஆம் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் படம் வெளியாகி 16 நாட்கள் ஆன நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் விக்ரம் திரைப்படம் 150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது, பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் விக்ரம் திரைப்படம் உலக அளவில் 360 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
View this post on Instagram
விக்ரம்’படம் பிரமாண்ட வெற்றியை பெற்றதையடுத்து இயக்குநர் லோகேஷூக்கு காரும், துணை இயக்குநர்களுக்கு பைக்கும், நடிகர் சூர்யாவுக்கு தான் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்சும் பரிசளித்து ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் கமல்ஹாசன். இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
75 கோடிக்கு மேல் ஷேர்
அப்போது பேசிய உதயநிதி, “ கமல் சார் எனக்குத்தான் முதலில் படம் போட்டு காண்பித்தார். நாங்கள் நான்கு பேர் படம் பார்த்தோம். படத்தின் இடைவேளை காட்சியை பார்த்ததும் அனைவரும் ஷாக் ஆகிவிட்டோம். காரணம் தமிழ் சினிமாவில் அப்படி ஒரு இடைவேளையை நான் இதுவரை பார்த்ததில்லை. அப்போதே இந்தப் படம் பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. ஆனால், இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்க வில்லை. இந்தப் படம் இதுவரை 75 கோடி ரூபாய் ஷேரை தாண்டி வசூல் செய்துள்ளது. இதுவரை எந்தத் தமிழ் சினிமாவும் இவ்வளவு வசூல் செய்ததில்லை. அடுத்த படத்திலும் இதே மாதிரி பெரிய வெற்றியை கொடுக்க லோகேஷ் கனகராஜூக்கு வாழ்த்துகள்.” என்று பேசியிருந்தார்.