ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
பான் கார்டு மற்றும் பேங்க் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இந்த விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இணைப்புக்கான காலக்கெடு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்தியாவில் உள்ள ஒவ்வோர் இந்தியனும் ஆதார் கார்டு- பான் கார்டு ஆகியவற்றைக் கட்டாயம் இணைக்க வேண்டும். இதற்கு டிசம்பர் 31ஆம் தேதி கடைசித் தேதி ஆகும்.
ரூ.50,000-க்கு மேல் பேங்க் பரிவர்த்தனை செய்ய முடியாது?
மத்திய அரசு ஜனவரி 1 முதல் பான் (PAN - Permanent Account Number) மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக ரூ.50,000-க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் அனுப்புவது தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. அதேபோல வங்கிக் கணக்கு தொடங்குவதிலும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் வாங்குவதிலும் பிரச்சினை ஏற்படும்.
மேலும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை வாங்குவதிலும் புது விதிகள் அமலுக்கு வர உள்ளன. இதனால், பான் கார்டு மற்றும் பேங்க் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இந்த விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இணைப்புக்கான காலக்கெடு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இனி இதற்கு மேல் நிச்சயமாக இணைப்பு நீட்டிப்புக்கான காலக் கெடு அளிக்கப்படாது என்று
ஆதார் – பான் கார்டை இணைப்பது எப்படி? (Aadhaar - PAN Link)
- வாடிக்கையாளர்கள் முதலில், https://eportal.incometax.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதில் இடது புறம் உள்ள Link Aadhaar Status என்பதை கிளிக் செய்யுங்கள்.
- பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளீடு செய்யுங்கள்.
- View Link Aadhaar Status என்பதை க்ளிக் செய்து, லிங்க் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பான் மற்றும் ஆதார் அட்டைகளில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் ஆகியவற்றில் ஏதேனும் வேறுபாடு இருந்தால், பான் - ஆதார் இணைப்பு நிராகரிக்கப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






















