தொடங்கிய இடத்திலேயே அநாதையாக உயிரிழந்த ‘மாநகர காவல்’ திரைப்பட இயக்குநர்
விஜய்காந்த் நடிப்பில் ஏவி.எம் நிறுவனத்தின் 150 வது படமாக உருவான ‘மாநகர காவல்’ படத்தின் இயக்குநரான எம்.தியாகராஜன் அதே ஏவிஎம் ஸ்டுடியோ எதிரிலேயே இன்று அதிகாலை தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்துள்ளார்.
விஜய்காந்த் நடிப்பில் ஏவி.எம் நிறுவனத்தின் 150 வது படமாக உருவான ‘மாநகர காவல்’ படத்தின் இயக்குநரான எம்.தியாகராஜன் அதே ஏவிஎம் ஸ்டுடியோ எதிரிலேயே இன்று அதிகாலை தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்துள்ளார்.
விஜயகாந்த் நடிப்பில் உருவான மாநகர காவல் திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படம். இப்படத்தில், சுமா, நாசர், ஆனந்தராஜ், எம்.என்.நம்பியார், லட்சுமி, செந்தில், தியாகு, சின்னி ஜெயந்த், பொன்னம்பலம், ராஜேஷ் என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும். ABP Exclusive: முதுகுளத்தூர் மணிகண்டனை போலீசார் விசாரிக்கும் அதிர்ச்சி வீடியோ! கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்!
இப்படத்தில் உள்ள 5 பாடல்களுக்கும் வாலிதான் வரிகள் எழுதியிருப்பார். இதில் சந்திரபோஸ் இசையில், எஸ்பி பாலசுப்ரமணியம், எஸ்.பி சைலஜா ஆகியோர் பாடிய ‘வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர’ என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
1991 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை எம்.தியாகராஜன் இயக்கியிருந்தார். இந்தியப் பிரதமரைப் படுகொலையிலிருந்து காப்பாற்றும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் விஜயகாந்த். இந்த கதையை ஆக்ஷன் மற்றும் திரில்லர் மிகுந்த கதையாக வடிமைத்து காட்சிப்படுத்தியிருந்தார் எம்.தியாகராஜன். மேலும் படிக்க: Ashes Series Record: 140 ஆண்டுகால ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் முறியடிக்கப்படாத சாதனைகள் என்னென்ன தெரியுமா...?
ஏவிஎம்மின் எம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியன் ஆகியோர் இப்படத்தை தயாரித்திருந்தனர். ஏவிஎம்மின் 150வது படமான மாநகர காவல் 150வது நாளை கடக்கும்போது தமிழகம் எங்கும் ஆரவாரமாய் கொண்டாடப்பட்டது.
இவ்வளவு சிறப்புமிகுந்த இந்த படத்தின் இயக்குநர் எம்.தியாகராஜன் இன்று அதே ஏவிஎம் ஸ்டுடியோ எதிரிலேயே தெருவோரமாய் அனாதையாக இறந்து கிடந்தார். எம். தியாகராஜன் இப்படமட்டுமில்லாமல், 1989ஆம் ஆண்டு பிரபு, சீதா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்த வெற்றி மேல் வெற்றி என்ற படத்தை இயக்கியுள்ளார். அதேபோல், அதே ஆண்டு பொண்ணு பார்க்க போறேன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார் எம்.தியாகராஜன். இதிலும் பிரபு, சீதா முன்னனி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். வெற்றி மேல் வெற்றி படத்திற்கும், பொண்ணு பார்க்க போறேன் படத்திற்கும் கங்கை அமரன் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்