Vijayakanth Death: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவு.. கதறும் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள்
Vijayakanth Death: சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (Vijayakanth) உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை த்ரிஷா
- நடிகை த்ரிஷா வெளியிட்ட பதிவில், “கேப்டன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது இரக்க குணத்தை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். பிரேமலதா மேடம் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
நடிகர் விக்ரம்
- நடிகர் விக்ரம், “மிகவும் அன்பான மற்றும் அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவரின் காலமானதைக் கேட்டு வருத்தமடைந்தேன். நாங்கள் உங்களை மிஸ் பண்ணுவோம் கேப்டன்!!” என தெரிவித்துள்ளார்.
நடிகர் & மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
நடிகை குஷ்பூ
We have lost a gem. A man with a golden heart. A man who truly deserved a lot more. Our beloved Captain, our Vijaykanth. Sir, hope you are finally at peace. Deepest condolences to his family, fans and devoted party workers.
— KhushbuSundar (@khushsundar) December 28, 2023
Om Shanthi. 🙏🙏🙏😭😭😭😭
#RIPVijaykanth… pic.twitter.com/TugRlIrkO8
- நடிகை குஷ்பூ வெளியிட்ட பதிவில், “ஒரு ரத்தினத்தை இழந்துவிட்டோம். தங்க இதயம் கொண்ட மனிதர். உண்மையில் இன்னும் நிறைய தகுதியுள்ள ஒரு மனிதன். எங்கள் அன்புக்குரிய கேப்டன், எங்கள் விஜயகாந்த். ஐயா, நீங்கள் இறுதியாக நிம்மதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ்
அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன் 🙏 MISS U CAPTAIN @iVijayakant 💔 pic.twitter.com/2hz0hyyXqz
— Mari Selvaraj (@mari_selvaraj) December 28, 2023
“அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன்..உங்களை நிச்சயம் மிஸ் செய்வோம்..” என இயக்குநர் மாரி செல்வராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா
“எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்-ன் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது; விஜயகாந்த்-ன் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என இயக்குநர் இமயம் பாரதிராஜா கூறியுள்ளார்.