மேலும் அறிய

Vijayakanth: ‛மீண்டும் வாருங்கள்...அன்பு தம்பி அழைக்கிறேன்’ விஜயகாந்துக்கு சரத்குமார் பிறந்தநாள் வாழ்த்து!

வாழ்க்கையில எந்தவொரு பின்னடைவு இருந்தாலும் அதிலிருந்து போராடி வெற்றி பெற்றவர். அந்த போராட்ட குணம் உங்களிடத்தில் உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி நல்ல பெயரை மட்டுமே சம்பாதித்தவர்கள் தனித்தனியே இருக்கிறார்கள். ஆனால், இரண்டிலும் நல்ல பெயரைமட்டும் சம்பாதித்தவர் என்றால் அது விஜயகாந்த் தான். 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை திரைப்படம் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். ஆனால் 1980 ஆம் ஆண்டு வெளியான தூரத்து இடி முழக்கம் படம் தான் அவரை அனைவரிடத்திலும் பரீட்சையமாக்கியது. 

சுமார் 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் விஜயகாந்த், சினிமா என்னும் கலையை வசூலுக்காக மட்டும் என்றல்லாமல் எல்லா தரப்பு மக்களும் பயனடையவேண்டும் என்று நினைத்தவர் . தனக்கு போட்டியாக கருதப்பட்ட சக நடிகர்களையும் அனுசரித்து அரவணைத்து சென்றதால் இன்றும் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக விஜயகாந்த் உள்ளார். 1984 ஆம் ஆண்டில் மட்டும் விஜயகாந்த் 18 படங்களில் நடித்து சினிமாத் துறையில் சாதனைப் படைத்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sarath Kumar (@r_sarath_kumar)

1999 ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர், பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை கலை நிகழ்ச்சிகள் மூலம் அடைத்ததோடு மட்டுமல்லாமல்,  நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தினார்.  தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொண்ட பற்றால் தனது 100வது படத்துக்கு கேப்டன் பிரபாகரன் என்றும், தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்றும் பெயர் சூட்டினார். 

இதற்கிடையில் தனக்கு வாழ்க்கை கொடுத்ததே விஜயகாந்த் தான் என்றும், விஜயகாந்துக்கு வரும் கதையில் நடிக்க சரியானவர் நான் தான் என்று நினைத்தால் அந்த இயக்குநரை தன்னிடம் அனுப்புவார்  என சரத்குமார் பல இடங்களில் நினைவு கூர்ந்துள்ளார். அந்த அளவுக்கு இருவருக்குமான நட்பும், அன்பும் நிறைந்திருந்தது. விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடித்த சரத்குமார் பின்னாளில் முன்னணி நடிகராக உயர்ந்தார். அந்த நன்றியை என்றைக்கும் மறக்காதவர் என்பதை நிரூபிக்கும் வகையில், சரத்குமார் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், வாழ்க்கையில எந்தவொரு பின்னடைவு இருந்தாலும் அதிலிருந்து போராடி வெற்றி பெற்றவர். அந்த போராட்ட குணம் உங்களிடத்தில் உள்ளது. மீண்டும் உங்கள் ரசிகர்களுக்காகவும், எங்களைப் போன்ற சகோதரர்களுக்காகவும் புத்துணர்ச்சி பெற்று இந்த பிறந்தநாள் முதல் சிறப்பாக எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என இந்த அன்பு தம்பி வேண்டிக் கொள்கின்றேன். மீண்டும் புரட்சிக்கலைஞர் விஜயகாந்தை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget