முதல் வாழ்த்து விஜயிடம் இருந்து தான் வந்தது ..அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா ஓப்பன் டாக்
கார் ரேஸில் அஜித் வெற்றிபெற்றத பின் ஃபோன் கால் மூலம் முதல் வாழ்த்து தெரிவித்தவர் நடிகர் விஜய்தான் என சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்

அஜித்
துபாயில் நடைபெற்ற கார் பந்தையத்தில் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது ரேஸிங் குழு மூன்றாவது இடத்தை பிடித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அரசு சார்பாக அஜித்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப் பட்டது. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் சார்பாக அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்கப்படவில்லை என்பது கேள்வியாக இருந்தது. அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் உட்பட பல்வேறு சமூக நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றி வருகிறார் விஜய் .ஆனால் அஜித் விஷயத்தில் மட்டும் அவர் மெளனமாக இருப்பது ஏன் என சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பப் பட்டது.
இது குறித்து அஜித்தின் மேலாளர் தற்போது உண்மையை தெரிவித்துள்ளார். கார் பந்தையத்தில் வெற்றிபெற்றபோதும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட போதும் அஜித்திற்கு ஃபோன் செய்து முதலில் வாழ்த்து தெரிவித்தது விஜய்தான் என சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
In social media people expecting actors to wish only on X or their official pages. When Ajith won in racing , it was Vijay who first wished him over the phone. For his latest Padma Bhushan accolades too Vijay wished him first over the phone - @SureshChandraa pic.twitter.com/0T4r92Kt1T
— Rajasekar (@sekartweets) January 31, 2025
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

