The Goat : ஆசை காட்டி ஏமாத்திட்டாங்க... விஜயின் தி கோட் படத்தின் ட்ரெய்லர் அப்டேட்டில் தாமதம்
The Goat Trailer : விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ட்ரெய்லர் அப்டேட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது
தி கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தின் ட்ரெய்லரை ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபுதேவா , பிரசாந்த் , சினேகா , லைலா , மோகன் , பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சித்தார்த் நுனி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தி கோட் படத்தின் ட்ரெய்லர் பற்றிய அப்டேட் இன்று வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது ட்ரெய்லர் அப்டேட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு பதிலாக கோட் படத்தின் நடிகர்கள் அனைவரையும் உள்ளடக்கிய சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
I promised a Trailer launch date today. We are still working on bringing the best version to you ❤️🤗 So here is a small treat for Waiting to see our #Thalapathy on screen very soon #ThalapathyFansForever ❤️#GOAT pic.twitter.com/HhY5Dn2u5u
— Archana Kalpathi (@archanakalpathi) August 14, 2024
ரசிகர்களை கவருமா தி கோட்
விஜயை வைத்து படம் இயக்குவது இயக்குநர் வெங்கட் பிரபுவின் நிறைய நாள் கனவாக இருந்து தற்போது நிறைவேறியுள்ளது. இப்படத்தில் விஜய் தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். விஜயின் இள வயது தோற்றம் டீ.ஏஜிங் தொழில்நுட்பத்தின் வழியாக உருவாக்கப் பட்டுள்ளது. டைம் டிராவலை மையப் படுத்திய ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சமீபத்தில் தி கோட் படத்தை நடிகர் விஜய் பார்த்து இயக்குநர் வெங்கட் பிரபுவை பாராட்டியதாகவும் நிறைய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வெங்கட் பிரபு தி கோட் படத்தின் கதைச் சுருக்கத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் அவர் " இப்படம் முழுக்க முழுக்க கற்பனையான ஒரு கதை என்றாலும அதை முடிந்த அளவிற்கு எதார்த்ததிற்கு நெருக்கமானதாக எடுக்க முயற்சி செய்திருக்கிறோம். தீவிரவாதத்திற்கு எதிராக இயங்கும் SWAT மற்றும் RAW ஆகிய இரு குழுக்களும் இணைந்து ஒரு மிஷனை எடுத்து முடிக்கிறார்கள். கடந்த காலத்தில் செய்த தவறு ஒன்று எதிர்காலத்தில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தான் படத்தின் கதை .முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் நிறைய சஸ்பென்ஸ்களும் இருக்கின்றன. நிச்சயம் ரசிகர்களுக்கு இப்படம் கொண்டாட்டமான ஒரு அனுபவமாக இருக்கும் " என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.