மேலும் அறிய

GOAT Movie Leaked: அதுக்குள்ளயா? இணையத்தில் வெளியான விஜய்யின் கோட் - தமிழ்ராக்கர்ஸ் அட்டூழியம்

The GOAT Movie Leaked: நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கோட் திரைப்படம் இணையத்தில் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள  திரைப்படம் கோட். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு திரையரங்கில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

இணையத்தில் வெளியான கோட்:

இந்த நிலையில், கோட் படம் இன்று வெளியாகி இரண்டு காட்சிகள் மட்டுமே திரையரங்கில் ஒளிபரப்பாகியுள்ள நிலையில் இணையதளத்தில் படம் வெளியாகியுள்ளது. இது தயாரிப்பாளர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் அதற்குள் இணையத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோட் படம் தமிழ் ராக்கர்ஸ்(Tamilrockers) இணையதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் அதை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ரசிகர்களிடம் வரவேற்பு:

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற அதிர்ச்சியை அவரது ரசிகர்களுக்கு அளித்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள கடைசி படத்திற்கு முந்தைய படமாக தி கோட் படம் இன்று வெளியாகியுள்ளது.

யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல நடிகர் மோகன் வில்லனாக நடித்துள்ளனர். மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் படத்தில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த நான்கு நாட்களுக்கு திரையரங்கில் டிக்கெட்டுகள் முழு வேகத்தில் விற்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கோட் படம் இணையத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவினருக்கு பின்னடைவையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.  

ALSO READ | The GOAT Review: கொதிக்கும் ”The GOAT" ஜுரம்.. தெறிக்கவிட்டாரா விஜய்? முழு விமர்சனம் இதோ..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
Embed widget