தளபதி 69 படத்தின் டைட்டில் இதுவா ? செம பொருத்தமா இருக்கே
எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக உருவாகும் தளபதி 69 படத்தின் டைட்டில் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது

விஜய்
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது அரசியல் கட்சியை தொடங்கினார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழ்க வெற்றிக் கழகம் போட்டியிட இருக்கிறது. தற்போது கட்சி மாநாடு , மக்களை களத்தில் சந்திப்பது , எதிர் கட்சிகளை சரமாரியாக தாக்குவது என கிட்டதட்ட முழு அரசியல்வாதியாகவே மாறியுள்ளார் விஜய். அரசியலில் முழுவதும் களமிறங்கிய பின் திரைவாழ்க்கைக்கு விஜய ஃபுல் ஸ்டாப் வைக்கப் போகிறார். தற்போது அவரது கடைசி படமான தளபதி 69 படம் தயாராகி வருகிறது
தளபதி 69
கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது தளபதி 69. பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ , பாபி தியோல் , கெளதம் மேனன் , பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். சதுரங்க வேட்டை , தீரன் , துணிவு போன்ற தீவிரமான கதைக்களமும் கமர்சியலான வெற்றியையும் கொடுத்தவர் எச் வினோத். தற்போது தளபதி 69 படத்தின் கதையும் விஜயின் அரசியல் வருகைக்கு பெரிய முகாந்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தளபதி 69 படம் தெலுங்கில் பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து படக்குழு எந்த வித அதிகாரப்பூர்வமான தகவல்களையும் வெளியிடவில்லை.
தளபதி 69
தளபதி 69 படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பது தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. இப்படத்திற்கு விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு டைட்டிலை படக்குழு வைக்க திட்டமிட்டு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானார் நடிகர் விஜய். தற்போது அவர் சினிமாவை விட்டு போகும் நிலையில் ஒரு நாஸ்டால்ஜியாவுக்காக இந்த டைட்டிலை படக்குழு வைக்க இருப்பதாக பேசப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்
கேம் சேஞ்சர் பட தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு..8 இடங்களில் 55 அதிகாரிகள் சோதனை
தனுஷை கேட்காமல் முடிவெடுத்தாரா வெற்றிமாறன்..?புதுப்பட அறிவிப்பால் வந்த சிக்கல்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

