(Source: ECI/ABP News/ABP Majha)
Watch video : அரபிக்குத்துக்கு இப்படி ஒரு குட்டி ஃபேனா? அழுகையை சடாரென நிறுத்தி விஜயை ரசித்த கைக்குழந்தை!!
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியான இப்பாடல் 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புது சாதனை ஒன்றையும் படைத்தது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இந்தப்படத்தின் பின்னணி வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் முன்னதாக தொடங்கிய நிலையில் அண்மையில் படத்திலிருந்து, ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் வீடியோவாக, அரபிக்குத்து பாடல் வெளியிடப்பட்டது.
யூட்யூபில் வெளியான இப்பாடல், 170 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சக்கைப்போடு போட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியான இப்பாடல் 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புது சாதனை ஒன்றையும் படைத்தது.
பொதுவாக, நடிகர் விஜய்க்கு இளைஞர்கள் எந்த அளவுக்கு ரசிகர்களாக இருக்கிறார்களோ, அதே அளவிற்கு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவருக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்கும். பல குழந்தைகளுக்கு விஜய்தான் சூப்பர்ஹீரோ! அப்படி இருக்கையில் விஜய்யின் அரபிக் குத்து பாட்டு கேட்டு ஒரு 10 மாத குழந்தை அழுகையை நிறுத்தும் வீடியோ வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கையில் இருக்கும் குழந்தை ஓவென அழுதுகொண்டிருக்கிறது. அப்பொழுது அந்த குழந்தையில் அழுகை நிப்பாட்ட, குடும்பத்தில் உள்ளவர்கள் அரபிக் குத்து பாடலை ஒலிக்க செய்கின்றனர்.
View this post on Instagram
அந்த பாடலை கேட்டதும் குழந்தை சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்தி விடுகிறது. அட என்னடா இது என்று நம்மை ஆச்சர்யப்படுத்த, சரி இது ஏதோ எதார்த்தமாக நடந்தது என்று நம்மால் கடந்து போகவும் முடியாது. குழந்தை அழுகையை நிறுத்தியவுடன் குடும்ப உறுப்பினர்கள் பாடலை நிறுத்தி விடுகின்றனர். பாடலை நிறுத்தியவுடன் மீண்டும் குழந்தை அழ தொடங்கிவிடுகிறது. மீண்டும் பாடலை ஒலிக்க குழந்தையையும் அழுகையை நிறுத்தி விடுகிறது.
தற்போது, இந்த க்யூட் வீடியோவை பலரும் தங்களது இணைய பக்கத்தில் ஷேர் செய்தும், விஜய் ரசிகர்கள் கொண்டாடியும் வருகின்றனர். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது ? யாரால் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்