கிராமியக் கலைஞர்களுடன் விஜய் சேதுபதி மாஸ் டான்ஸ் : வைரலாகும் வீடியோ..!
வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான மாஸ்டர் 'மாஸ்டர் செஃப்' என்ற சமையல் நிகழ்ச்சி தற்போது இங்கு பிரபலமடைகிறது.
மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் கிராமியக்கலைஞர்களுடன் நடிகர் விஜய் சேதுபதி வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
வில்லன், கதாநாயகன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்தக் கதைக்களத்தில் நடிக்கச்சொன்னாலும் தன்னிடம் உள்ள திறமைகளை அழகாக வெளிப்படுத்தி வருபவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், தற்பொழுது தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் பணிபுரியவுள்ளார் விஜய் சேதுபதி.
முன்பெல்லாம் மக்கள், தொலைக்காட்சிகளில் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நாயகி, நாயகர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளது என்றே சொல்லலாம். ஆனால் தற்பொழுது ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்களிடம் பிரபலம் அடையத்தொடங்கிவிட்டது. குறிப்பாக சமையல் நிகழ்ச்சிகளை வித்தியாசமாக முறையில் நடத்திய குக்வித் கோமாளிக்கு நிகழ்ச்சிக்கு இல்லத்தரசிகள் மட்டுமில்லாது அனைத்து தரப்பு வயதினர் உட்பட மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்க தொடங்கியதோடு, இந்நிகழ்ச்சிக்கு டிஆர்பியும் அதிகரித்தது. மேலும் இதில் கலந்து கொண்டவர்கள் பலருக்கு படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் தான், வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான மாஸ்டர் 'மாஸ்டர் செஃப்' என்ற சமையல் நிகழ்ச்சி தற்போது சன் டிவி மூலம் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது. இதில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கவுள்ளார். மற்ற சமையல் நிகழ்ச்சிக்களைப்போன்று இதுவும் மக்களிடம் பிரபலம் அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய சமையல் நிகழ்ச்சி எப்பொழுது ஒளிப்பரப்பாகும் என்ற தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்நிகழ்ச்சி குறித்த ப்ரோமக்கள் மட்டும் வெளியாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஜூன் 30 ஆம் தேதி சன்டிவியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் , விஜய் சேதுபதி கிராமக்கலைஞர்களுடன் வெறித்தனமாக குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று வெளியானது. இதில் கலைஞர்களின் மேள சத்தத்திற்கு ஏற்ப திருவிழாக்களில் நடனம் ஆடுவது போல் விஜய் சேதுபதி ஆடியிருந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இதோடு மட்டுமின்றி 2 நாட்களில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் இந்த வீடியோவினை ஷேர் செய்தும் வருகின்றனர்.
மேலும் விஜய் சேதுபதியின் இந்த ப்ரோமோவினை பார்த்தவுடன் எப்பொழுது நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும் என்ற கேள்வி மக்களிடம் அதிகளவில் எழ ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் தான் மீண்டும் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நல்ல சமைப்பவர்களுக்கு வளையல், மோதிரம் லஞ்சம் கொடுக்கலாம் அது தப்பில்லை என கூறியுள்ளார். மேலும் அசத்தலா சமைச்சத உலகமே கொண்டாடக்கூடிய மேடை தான் இது. நம்ம மக்கள் சமைக்கும் டக்கர் சமையல் என்று விஜய் சேதுபதி கூறுவது போல் மற்றொரு வீடியோவும் மக்களிடம் அதிக கவனத்தினைப் பெற்றுள்ளது.