மேலும் அறிய

Vijay Makkal Iyakkam: கண்ணசைக்கும் நடிகர் விஜய்..! களத்தில் இறங்கும் நிர்வாகிகள்..! அடுத்த மக்கள் பணிக்கு தயார்...!

Actor Vijay: நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச சட்ட ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளது

  விஜய் மக்கள் இயக்கம்

நடிகர் விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இது விரைவில் அரசியல் கட்சியாக மாறலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் 100-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு அணிகளும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. 

மாணவர்களுக்கு பரிசு 

முன்னதாக நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் 10 ஆவது மற்றும் 12ஆவது பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த தமிழ்நாடு மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகை வழங்கினார். இந்த நிகழ்வில் காமராசர், அம்பேத்கர், பெரியார் ஆகியோரைப் படிக்க வேண்டும் எனக் கூறிய நிலையில், விஜய்யின் இந்தப் பேச்சு அவரது அரசியல் பயணத்திற்கான வேலைகளை விஜய் செய்து வருகிறார் என்று பேசப்பட்டது. 

Vijay Makkal Iyakkam: கண்ணசைக்கும் நடிகர் விஜய்..! களத்தில் இறங்கும் நிர்வாகிகள்..! அடுத்த மக்கள் பணிக்கு தயார்...!

இதனைத் தொடர்ந்து,  கடந்த ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி பயிலகங்கள் தொடங்கப்பட்டன. தற்போது வரை தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 124 பயிலகங்கள் வரை  திறக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் நேரடியாக செல்லும் விஜய் மக்கள் இயக்கம்

கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் மக்களிடம் நேரடியாக பயனுள்ள, முக்கிய விஷயங்களை செய்ய விஜய் மக்கள் இயக்கம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கம்  சார்பில்  பல்வேறு மாவட்டங்களில்  விலையில்லா விருந்தகம் திட்டம் மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில்  வார இறுதி நாட்களில் பால் முட்டை ரொட்டி வழங்குதல்,  ஏழை குழந்தைகளுக்கு இரவு நேர பயிலகம்,  விழியகம்,  குருதியகம்,  உள்ளிட்ட முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

Vijay Makkal Iyakkam: கண்ணசைக்கும் நடிகர் விஜய்..! களத்தில் இறங்கும் நிர்வாகிகள்..! அடுத்த மக்கள் பணிக்கு தயார்...!
  இலவச சட்ட ஆலோசனை மையம்

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில், இலவச சட்ட ஆலோசனை மையம் அமைப்பதற்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டிலே முதல் முறையாக  நடிகர் விஜய்யின் உத்தரவின்படி,  சென்னை கொடுங்கையூர் கேகே நகர்  ஆறாவது தெருவில் இலவச சட்ட ஆலோசனை மையம் நேற்று திறக்கப்பட்டது. விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  கலந்து கொண்டு  இலவச சட்ட ஆலோசனை மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

Vijay Makkal Iyakkam: கண்ணசைக்கும் நடிகர் விஜய்..! களத்தில் இறங்கும் நிர்வாகிகள்..! அடுத்த மக்கள் பணிக்கு தயார்...!

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது: முதன்மையாக குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கி  அவர்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுப்பது.  வங்கிக் கடன், வீட்டுக் கடன், தனியார் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு  இழப்பீடு பெற்று தருதல், சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல், நுகர்வோர்  நிறுவனங்களிலிருந்து எழுப்பி விடு பெற்று தருதல் உள்ளிட்ட  பணிகள் இந்த  இலவச சட்ட ஆலோசனை மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

அடுத்த இலக்கு இதுதான்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இவை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று விரைவில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம் தொடங்க திட்டம் இருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் கட்டமைப்பு இன்னும் வலுப்பெறும் என விஜய் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
Trump Epstein Files: புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
Trump Epstein Files: புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget