Vijay Flashback: எங்கிருந்தாலும் வீடு தேடி ஓடும் அசைவ பிரியர்... சென்டிமென்ட் பார்க்கும் குட்டி ரூம்... இது தளபதி ஃப்ளாஷ் பேக்..
நடிகர் சிவாஜி கணேசன் அவர்களோடு இனைந்து 'ஒன்ஸ்மோர்' படத்தில் நடிக்கையில் நேர்மை, நேரம் தவறாமை இவை எல்லாம் பார்த்து வியந்தேன். மூன்று மாதமும் பிலிம் ஸ்கூல் சென்று படித்தது போல இருந்தது - நடிகர் விஜய்

இன்று தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர், அதிகளவிலான சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர் மட்டுமின்றி உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகராக மக்கள் கொண்டாடி வரும் ஒரு நடிகர் விஜய். பொங்கல் ரிலீஸாக ஜனவரி 11ம் தேதி வெளியாகி தற்போது பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்று உலகளவில் வசூலில் சாதனை படைத்தது வருகிறது 'வாரிசு' திரைப்படம்.
ஸ்பெஷலான முதல் விருது :
இன்று இப்படி கொண்டாடப்படும் நடிகரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றின ஒரு பிளாஷ் பேக் இன்டெர்வியூவில் சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இன்று நடிகர் விஜய் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். இருப்பினும் முதன் முதலில் வாங்கிய விருது என்பது அவருக்கு மட்டுமல்ல யாராக இருந்தாலும் அது மிக மிக ஸ்பெஷல். அப்படி விஜய் முதலில் மேடையேறி விருது வாங்கியது 'செந்தூரபாண்டி' திரைப்படத்திற்காக.

வீட்டிற்கு வந்த சூப்பர் ஸ்டார்:
'ராஜாதிராஜா' படத்தின் ஷூட்டிங் நடந்தது விஜய் வீட்டில் தான். அந்த சமயத்தில் தனது ஃபேவரட் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய வீட்டிற்கு வந்ததில் மிகுந்த சந்தோஷத்தில் இருந்த விஜய் அவருடன் ஒரு போட்டோ எடுத்து கொண்டு அதை பெரிய பிரேம் போட்டு தனது அறையில் மாட்டிவைத்துள்ளாராம். ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்த சமயத்தில் அவரின் நேர்மை, நேரம் தவறாமை இவை எல்லாம் பார்த்து வியந்துள்ளார். ஒரு பிலிம் ஸ்கூல் சென்று படித்தது போன்ற அனுபவம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து பணிபுரிந்த அந்த 3 மாதங்கள் என நெகிழ்ந்தார்.
விரும்பி சாப்பிடும் உணவு :
அந்த காலத்தில் விஜய் டயட் மீது அதிகம் கவனம் செலுத்துவாராம். தோசை, பூரி என்றால் மிகவும் விரும்பி சாப்பிடும் விஜய் மதியத்திற்கு அசைவ சமையலை தான் விரும்புவாராம். உள்ளூரில் ஷூட்டிங் நடந்தால் டான் என சாப்பிடும் நேரத்திற்கு வீட்டிற்கு வந்து தான் சாப்பிடுவாராம். உடலை பிட்டாக அந்த நாள் முதல் வைத்து இருக்கும் விஜய் டயட் மட்டும் ஃபாலோ செய்யாமல் ரெகுலர் உடற்பயிற்சியையும் செய்யும் பழக்கம் உடையவர். அதற்காக ஜிம் போனது கிடையாது. வீட்டிலேயே சில உடற்பயிற்சி சாதனங்களை வைத்து அங்கே செய்து கொள்வதை வழக்கமாக கொண்டவர்.
Poove Unakkaga was the first blockbuster in Thalapathy @actorvijay career and went on to become a Silver Jubilee, running for nearly 270 days at the box office.
— Vijay Fans Trends (@VijayFansTrends) February 15, 2021
This classic movie still ruling the hearts of many people ❤#25YearsofPooveUnakkaga #Master @SuperGoodFilms_ pic.twitter.com/7mtCOMKwDQ
சென்டிமென்ட் ரூம்:
படத்திற்கான கதை கேட்பதற்கு என ஒரு தனியாக குட்டி ரூம் வைத்திருந்தார் விஜய். சென்டிமென்ட் காரணமாக அங்கே தான் படத்தின் கதை கேட்பதை வழக்கமாக கொண்டவர். தனது முதல் படம் முதல் அனைத்து படங்களின் கதையும் அந்த ரூமில் தான் கேட்டுள்ளார். குறிப்பாக விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றிபெற்ற 'பூவே உனக்காக' திரைப்படத்தின் கதை கூட அந்த அறையில் தான் கேக்கப்பட்டதாம். 'பூவே உனக்காக' படத்தில் அவருக்கு பிடித்த பாடல் 'ஓ பியாரி பானி பூரி...' பிடித்த காட்சி கிளைமாக்ஸ் காட்சியாம். நடிகர் விஜய் மசாலா திரைப்படங்களாக நடித்து வந்த சமயத்தில் அவரின் திரை வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் பூவே உனக்காக. அந்த திரைப்படத்திற்காக ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்.
அதிக நாட்கள் திரையரங்கில் ஓடிய 'பூவே உனக்காக' படத்துக்காக மதுரையில் ஒரு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கமலா திரையரங்கத்தில் உரிமையாளர் மற்றும் அவரின் மகன் கலந்து கொண்டு நடிகர் விஜய்க்கு ஒரு விநாயகர் சிலையும் ஒரு வாளும் வழங்கியுள்ளனர். அந்த காலத்தில் மதுரையில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் 'பூவே உனக்காக' என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று விஜய் ஏரளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த சமயத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அவரை பேட்டி கன்னட ஒரு பிளாஷ் பேக் வீடியோ ஒன்றை தற்போது பார்க்கையில் அவரின் ரசிகர்களுக்கு அது மெய்சிலிர்க்கும் உணவாக உள்ளது. அன்று அதே சிம்ப்ளிசிட்டி, தன்னடக்கம், ஆடம்பரம் இல்லாத பேச்சு, அமைதியான குணம். இது தான் இன்றும் இந்த கலைஞனை ரசிகர்களை நெஞ்சங்களில் கொண்டாட வைக்கிறது.





















