மேலும் அறிய
Advertisement
ஆடியோ லாஞ்ச் இல்லைனா என்ன? ஆட்சிய புடிச்சுட்டா போச்சி! பரபரப்பை கிளப்பும் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்!
" செங்கல்பட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் "
விஜயை அரசியலுக்கு வர வேண்டுகோள் விடும் வகையில், செங்கல்பட்டு நகர் பகுதியில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட லியோ இசை வெளியீட்டு விழா
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 5வது படமாக உருவாகியுள்ள லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ், ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் உள்ளிட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இசை வெளியீட்டு விழா நடக்கவிருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிகப்படியான பாஸ்கள் கோரிக்கை எழுந்ததால் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அரசியல் அழுத்தம் இல்லை என்ற தயாரிப்பு நிறுவனம்
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 6000 பேர் வரை பங்கேற்கலாம். ஆனால், லியோ இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட்டுகளில் சுமார் 5000 ஆயிரம் டிக்கெட்டுகள் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுக்கு மட்டும் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. மீதமுள்ள டிக்கெட்டுகள் மட்டுமே படக்குழுவினருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் குவிய தொடங்கியுள்ளது. அப்படி கூடுதல் டிக்கெட்டுகளை வழங்கினால் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி மற்றும் மதுரை ஹாப்பி ஸ்ட்ரீட் போன்று பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக படக்குழு கருதியுள்ளது.
இதன் காரணமாகவும், படத்தின் வணிகத்தை கருத்தில் கொண்டும் தான், இசைவெளியிட்டு விழாவை லியோ படக்குழு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதில் அரசியல் அழுத்தம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது. இப்படியான நிலையில் லியோ ஆடியோ நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதில் அரசியல் நோக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆட்சிய புடிச்சுட்டா போச்சி என்ன நண்பா ?
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி சார்பில், செங்கல்பட்டு நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. " ஆடியோ லாஞ்ச் இல்லைனா... என்ன ! ஆட்சிய புடிச்சுட்டா போச்சி என்ன நண்பா ? ". இளைஞர் அணி, தொண்டரணி, மகளிர் அணி ,வழக்கறிஞர் அணி, மாணவரணி, விவசாய அணி உள்ளிட்ட அணிகள் தயார் நிலையில் உள்ளது , அண்ணா உங்களுடைய அதிரடி அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என இரண்டு போஸ்டர்கள் செங்கல்பட்டு நகர் முழுவதும் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், போஸ்டர் மூலம் தொண்டர்கள் அறைகூவல் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர் தற்பொழுது சமூக ஊடகங்களிலும் விஜய் ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion