Beast Success Party: பீஸ்ட் குழுவுக்கு பார்ட்டி வைத்த விஜய்.. சந்தோஷமான நெல்சன்.. வைரலாகும் ட்வீட்..
நடிகர் விஜய் பீஸ்ட் படக்குழுவிற்கு விருந்து அளித்துள்ளார்.
![Beast Success Party: பீஸ்ட் குழுவுக்கு பார்ட்டி வைத்த விஜய்.. சந்தோஷமான நெல்சன்.. வைரலாகும் ட்வீட்.. Vijay hosts party for Beast team Nelson Dilipkumar, pooja hegde, anirudh Nelson shared pic in social media Beast Success Party: பீஸ்ட் குழுவுக்கு பார்ட்டி வைத்த விஜய்.. சந்தோஷமான நெல்சன்.. வைரலாகும் ட்வீட்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/25/d612fe0de5054febd5cf5a815f519640_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பீஸ்ட் படக்குழுவிற்கு நடிகர் விஜய் விருந்து அளித்தது தொடர்பான புகைப்படத்தை அந்தப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
#Thalapathy ❤️ #Beast 💥@actorvijay @anirudhofficial @hegdepooja @sunpictures @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv @Pallavi_offl @AlwaysJani @Jagadishbliss pic.twitter.com/NfhHx9pY9n
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) April 25, 2022
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெல்சன் திலிப்குமார் பதிவிட்ட பதிவில், “இந்த விருந்தை எங்களுக்கு தந்த விஜய் சாருக்கு நன்றி. இந்த மாலை பீஸ்ட் படக்குழுவிற்கு மறக்க முடியாத மாலையாகவும், மகிழ்ச்சியாகரமானதாகவும் அமைந்தது. உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி.” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த விருந்தை எங்களுக்கு தந்த விஜய் சாருக்கு நன்றி. இந்த மாலை பீஸ்ட் படக்குழுவிற்கு மறக்க முடியாத மாலையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. உங்களுடன் வேலை பார்ப்பதென்பது மிகவும் அழகனாது. எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.
இந்த அனுபவத்தை என் வாழ்நாள் முழுவதும் போற்றுவேன். உங்களின் ஆளுமையும், நீங்கள் இன்று இருக்கும் உயரமும்தான் இந்தப் படத்தை எல்லா இடத்திற்கும் கொண்டு சென்றுள்ளது. இந்த மிகப் பெரிய வாய்ப்பை வழங்கிய சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனுக்கும், காவியா மாறனுக்கும் எனது நன்றி. இவையெல்லாம் அருமையான படக்குழு அமையாமல் நிச்சயம் சாத்தியமாகி இருக்காது. உங்களுடன் வேலை பார்த்தது உற்சாகமாக இருந்தது. பீஸ்ட் படத்திற்கான எல்லா தடைகளையும் உடைத்து அன்பையும் ஆதரவையும் கொடுத்த ரசிகர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள். எப்பொழுதும் நீங்கள் விஜய் சாருடனும், எங்களுடனும் நின்றுள்ளீர்கள். அதுதான் இந்தப்படத்தை இவ்வளவு பெரிய வெற்றியை பெற வைத்திருக்கிறது.
முன்னதாக, நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து படம் குறித்தான ட்ரோல்களும், மீம்களும் சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. இந்த நிலையில் நெல்சன் அடுத்ததாக இயக்க இருந்த ரஜினியுடனான ‘தலைவர் 169’ படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு முற்றுப்புள்ளி விதமாக, இயக்குநர் நெல்சன் தலைவர் 169 படத்தை தானே இயக்குகிறேன் என்பதை குறிக்கும் வகையில் ட்விட்டரில் ‘தலைவர் 169’ என்ற பெயரை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)