![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: Poll of Polls)
Vijay Fans: விஜய் பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த காரியம்: 2 கைகளும் இல்லாத மாணவிக்கு இன்ப அதிர்ச்சி..!
மயிலாடுதுறையில் பிறந்தது முதல் இரண்டு கைகளும் இல்லாததால் காப்பகத்தில் வளர்ந்து வரும் மாணவி லட்சுமிக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் கல்வி உதவித்தொகையை வழங்கினர்.
![Vijay Fans: விஜய் பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த காரியம்: 2 கைகளும் இல்லாத மாணவிக்கு இன்ப அதிர்ச்சி..! Vijay Fans Take over Educational Expenses of student without two hands wins 12th exam result 2022 Mayiladadurai Vijay Fans: விஜய் பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த காரியம்: 2 கைகளும் இல்லாத மாணவிக்கு இன்ப அதிர்ச்சி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/22/8829c5b5f0ef209e90a5424d9ac9d1e1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் விஜய்யின் 48வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஆண்டு முழுவதும் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கொண்டாட இருப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதன் ஒன்றாக மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று பல்வேறு வகைகளில் விஜய் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். மேலும், மயிலாடுதுறையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகமான அன்பகம் காப்பகத்தில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் அவ்வியக்கத்தினர் காலை உணவு வழங்கி பரிமாறினர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வகுப்பு தேர்வுகள் வெளியாகிய நிலையில், இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்ததால் இந்த காப்பகத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு 16 நாள் குழந்தையாக சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் லட்சுமி என்ற மாணவி இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் பிளஸ் டூ பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தார். அந்த செய்தி ஊடகங்கள் வாயிலாக வெளியில் தெரியவர பலதரப்பட்ட மக்களும் அந்த மாற்றுத்திறனாளி மாணவியை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அன்பகம் காப்பகத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்க சென்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் அங்குள்ள மாணவர்களுக்கு காலை உணவை வழங்கியது மட்டுமல்லாமல், இரண்டு கைகளும் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் படித்து தேர்வு எழுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற லட்சுமியை சந்தித்து, வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவியாக அந்த மாணவியின் கல்லூரி படிப்புக்கான கல்வி செலவினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர். முதற்கட்டமாக முதல் பருவத்துக்கான தொகையாக 5000 ரூபாயினை காப்பக நிர்வாகிகளிடம் வழங்கினர். மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் குட்டி கோபி கூறுகையில், தொடர்ந்து அந்த மாணவியின் முன்னேற்றத்திற்காக விஜய்யின் மக்கள் இயக்கம் உதவி செய்யும் என உறுதியளித்து சென்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)