Miami Plane Crash: தீப்பற்றி கொண்ட விமானம்...126 பயணிகளின் நிலை என்ன? லேண்டிங் கியர் பழுதானதால் ஏற்பட்ட விபரீதம்...
தரையிறங்கும்போது விமானம் தீ பிடித்து கொண்டதில் குறைந்தபட்சம் மூன்று பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
அமெரிக்காவில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் 126 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் தீ பிடித்து கொண்டது. லேண்டிங் கியர் பழுதான காரணத்தால் தீ பிடித்து கொண்டதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Plane crash just a few minutes ago at Miami airport caught on camera! (Credit: @PTZtv ) pic.twitter.com/2CimvMhcUy
— WeatherGamer21 (@WeatherGamer21) June 21, 2022
டொமினிக்கன் குடியரசு சாண்டோ டொமிங்கோவிலிருந்து கிளம்பிய விமானம் மியாமியில் தரையிறங்கும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என விமான போக்குவரத்து துறை செய்தி தொடர்பாளர் கிரெக் சின் தெரிவித்துள்ளார்.
Wow! 😳 Video shared by Red Air Flight 203 passenger as they escaped burning plane Tuesday. Three people were injured. Investigators say landing gear collapsed as plane landed at Miami International Airport. #Miami
— John-Carlos Estrada (@Mr_JCE) June 22, 2022
📹: Paolo Delgado pic.twitter.com/dfoPu60VHf
இதில், மூன்று பேருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள், விபத்து நடைபெற்ற பகுதியிலிருந்து முனையத்திற்கு வாகனத்தின் மூலம அழைத்து செல்லப்பட்டனர்.
BREAKING: RED Air passenger plane goes off the runway and catches fire while trying to land at Miami International Airport pic.twitter.com/7l59t0Entu
— BNN Newsroom (@BNNBreaking) June 21, 2022
சம்பவம் நடந்த போது விமானம் சான்டோ டொமிங்கோவில் இருந்து மாலை 5.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. ஓடுபாதையின் ஓரத்தில் உள்ள புல்வெளி பகுதிக்கு அருகே விமானம் வந்து நின்றது. தீ விபத்து காரணமாக சில விமானங்கள் தாமதமாக வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Plane from Dominican Republic catches fire while landing in Miami after landing gear collapse…hoping people are ok 🙏 https://t.co/kALORItNx4pic.twitter.com/pdcPjQJIiU
— Wu-Tang Is For The Children (@WUTangKids) June 22, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்