(Source: Poll of Polls)
TN Arts College Admission: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி?
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று (ஜூன் 22-ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று (ஜூன் 22-ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதன்படி, ஜூன் 27-ம் தேதிக்கு பதில் யே ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை https://tngasa.org/, https://tngasa.in/என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டண விவரம்
விண்ணப்பக் கட்டணம் - ரூ.48/, பதிவுக் கட்டணம் - ரூ.2.
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் - ரூ.2/- மட்டும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்.
கட்டணம் செலுத்துவது எப்படி?
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Credit Card/ Debit Card/ Net Banking மூலம்
இணையதள வாயிலாகச் செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai - 6” என்ற பெயரில் 27/06/2022 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் https://tngasa.org/, https://tngasa.in/என்ற இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் தொடங்கும் நாள்: 22.06.2022
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 07.07.2022
தொடர்பு எண் - 044- 28260098/ 26271911.
இவ்வாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்