மகளுடன் சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம்..தரம்கெட்டு பேசிய விஜய் ரசிகர்கள்..நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகளுடன் வெளியிட்ட புகைப்படத்தை பகிர்ந்து சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் ஆபாசமாக பதிவிட்டு வருகிறார்கள்

ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய படங்களை வைத்து விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே சமூக வலைதளத்தில் நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்கள் பராசக்தி படத்தையும் சிவகார்த்திகேயனையும் விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள். இதில் ஒரு படி மேலே சென்று சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படத்தை பகிர்ந்து ஆபாசமாக பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனையால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியானது. இதனால் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகிறார்கள்.
வலுக்கும் விஜய் சிவகார்த்திகேயன் ரசிகர் மோதல்
தி கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்ததைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்கள். விஜய் படத்திற்கு போட்டியாக பராசக்தி திரைப்படம் வெளியாவது தெரிந்ததும் அதே ரசிகர்கள் சிவகார்த்திகேயனை மிக மோசமாக தாக்கி விமர்சித்து வருகிறார்கள். தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் பராசக்தி திரைப்படத்திற்கு எதிராகவும் தொடர்ச்சியாக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருகிறார்கள். இதன் அடுத்தகட்டமாக சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படத்தை பகிர்ந்து தரக்குறைவாக பதிவிட்டுள்ளார்கள் விஜய் ரசிகர்கள்
அத்து மீறிய விஜய் ரசிகர்கள்
பொங்கள் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் தனது மகள் மகன்களுடன் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். சில போலி எக்ஸ் கணக்கு மூலம் இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயனின் மகளை வைத்து மிக மோசமாக பதிவிட்டுள்ளார்கள் விஜய் ரசிகர்கள். இந்த பதிவை சமூக அக்கறையுள்ள பலரும் விமர்சித்து பதிவிட்டவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதெல்லாம் என்ன தைரியத்துல பண்றாங்க? பேக் ஐடில போட்டா எதுவும் பண்ண முடியாதுன்றது தைரியம் வேற ஒண்ணுமில்ல.
— Dr.Aravind Raja (@AravindRajaOff) January 15, 2026
காவல்துறை நினைச்சா எல்லாமே பண்ண முடியும். ஆனா பண்றதில்ல.. அட்லீஸ்ட் குழந்தைகளுக்கு எதிரான இந்த மாதிரி வக்கிரம் புடிச்ச மிருகங்களையாவது தூக்கி உள்ள போடுங்க @tnpoliceoffl pic.twitter.com/cvfeANqnHZ





















