Vijay Warns Bussy Anand: புஸ்ஸி ஆனந்தால் டென்சனான விஜய்..! நேரில் அழைத்து கண்டித்த தளபதி..! என்ன நடந்தது..?
அரசியல் பிரவேசத்திற்கு முன்பே காலில் விழும் கலாச்சாரம் தொடங்கியிருப்பது விஜய்யின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று முணுமுணுக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், புஸ்ஸி ஆனந்தின் காலில் விழுந்து வணங்கிய காட்சிகள் வைரலான நிலையில் புஸ்ஸி ஆனந்தை நடிகர் விஜய் கண்டித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரசிகர்களை சந்தித்த விஜய்:
சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரங்களிலும் சமீபத்திய பரபரப்பு செய்தி நடிகர் விஜய், தனது ரசிகர்களை சந்தித்தது தான். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்ற வெற்றி அரசியல் கட்சியினரையை புருவம் உயர்த்த வைத்தது.
அதன்பிறகு பரபரப்பாக செயல்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், பின்னர் சைலண்ட்டாகினர். இந்த நிலையில் விஜயின் ’வாரிசு’ திரைப்படம் ரிலீசாவதில் பிரச்னைகள் இருப்பதற்கான சமிக்ஞைகள் தெரிந்த நிலையில் மீண்டும் அரசியல் பிரவேச அதிரடியை விஜய் கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்த நிர்வாகிகள்:
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ரிலீசாகவிருக்கும் வாரிசு திரைப்படம் தொடர்பாக ஆலோசனை நடத்தவே விஜய் தன் ரசிகர்களை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் வைத்து சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பின்போது தான் மற்றொரு விஷயமும் நடந்திருக்கிறது. பனையூர் அலுவலகத்துக்கு விஜய் வந்தபோது ரசிகர்கள் அவரை மாஸாக வரவேற்றனர்.
View this post on Instagram
ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிய விஜய் ஒருவழியாக அலுவலகத்துக்குள் சென்றார். ஆனால், விஜய் மக்கள் இயக்க நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் வரும்போது, நிர்வாகிகள் பலர் அவர் காலில் விழுந்து வணங்கியிருக்கின்றனர்.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கும் இடத்தில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் காலில் பலர் விழுந்தது சமூக வலைதளங்களில் வைரலானது. திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இது குறித்து ட்வீட் செய்ய, அஜித் ரசிகர்களும் அவரை கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கினர்.
டென்சனாகிய விஜய்:
அரசியலில் விஜய் கால் பதிக்கும் பட்சத்தில் அல்லது தீவிர அரசியலுக்கு நிர்வாகிகளுக்கு பச்சைக்கொடி காட்டும் பட்சத்தில் சீட் வாங்குவதற்கு புஸ்ஸி ஆனந்தின் தயவு தேவைப்படும் என்பதால் அவரை நெருக்கமாக்கிக் கொள்ளபலர் ஆர்வம் காட்டுகின்றனர் என்று கூறப்படுகிறது.
நிர்வாகிகள் காலில் விழுந்தது குறித்து அறிந்து டென்சனான விஜய், புஸ்ஸி ஆனந்தை அழைத்து கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அரசியல் பிரவேசத்திற்கு முன்பே காலில் விழும் கலாச்சாரம் தொடங்கியிருப்பது விஜய்யின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று முணுமுணுக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.