Vijay Dressing Style: தாறுமாறாக வந்திறங்கிய விஜய்.. ஜேம்ஸ் வசந்தன் சார் இது ஓகேவா?.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்
மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அணிந்திருந்த ஆடைகள், உடல் தோற்றம் மற்றும் சிகை அலங்காரம் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அணிந்திருந்த ஆடைகள், உடல் தோற்றம் மற்றும் சிகை அலங்காரம் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஆர்ப்பரித்த ரசிகர்கள்:
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை, நடிகர் விஜய் நேரில் சந்தித்து பரிசுத்தொகை மற்றும் விருதுகளை வழங்கி கவுரவித்தார். சென்னை அடுத்த நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட விஜய், நூற்றுக்கணக்கான ரசிகர்கள் புடைசூழ மண்டபத்திற்கு வந்தடைந்தார். காரை அவரே ஓட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. மண்டபத்திற்குள்ளே விஜயே போகமுடியாத அளவிற்கு அங்கு ரசிகர்கள் குவிந்து இருந்த நிலையில், பெரும் போராட்டத்திற்குப் பின் விஜய் உள்ளே சென்றார்.
கவனம் ஈர்த்த விஜயின் ஸ்டைல்:
விழாவிற்காக சந்தன நிறத்தில் (ஐவரி கலர்) சட்டை அணிந்து, தனக்கே உரிய வகையில் தாடியை ஷேப் செய்து, சிறப்பான சிகை அலங்காரத்தில் மிகவும் சார்மிங்காக இருந்தார். நீண்ட நாட்களுக்குப் பின் விஜய் ஒரு சரியான ஆடை மற்றும் சிகை அலங்காரத்துடன் பொதுவெளியில் தோன்றியிருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ்...விஜய் கொடுத்த அன்பு பரிசுhttps://t.co/wupaoCzH82 | #Vijay #ActorVijay #VijayMakkalIyakkam #VIJAYHonorsStudents pic.twitter.com/SlQApflHS1
— ABP Nadu (@abpnadu) June 17, 2023
அன்று வந்த விமர்சனம்:
பொதுவாகவே திரைப்படங்களைப் போலவே, பொதுவெளியில் தோன்றும் போதும் தனது ஆடை அலங்காரங்களுக்கு விஜய் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஆனால், வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதிகப்படியான ஒப்பனை இல்லாமல் மிகவும் எளிமையாக தோன்றி இருந்தார். இதனால், விழாவில் விஜய் எடுத்த செல்பி வீடியோ, சொன்ன குட்டிக்கதை ஆகியவற்றுடன் அவரது தோற்றமும் கவனம் பெற்றது.
ஜேம்ஸ் வசந்தன் சாடல்:
குறிப்பாக இசையமைப்பாளர் விஜய் வசந்தன் சொன்ன கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பான பதிவில் “விஜய் தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிப்படுத்தி, பிரம்மாண்ட விழா மேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம். சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்” என விஜய்க்கு வலியுறுத்தி இருந்தார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி:
இந்த நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்சியில் மிகவும் அழகாக விஜய் தோன்றி இருந்தார். அதாவது எளிமை என்பதை தவிர்த்துவிட்டு தனது பழைய பாணியில் வந்து இருந்தார். இதையடுத்து,. இந்த ஸ்டைல் போதுமா என ஜேம்ஸ் வசந்தனை குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.