Vijay Deverakonda: ‛லைகர் ஃப்ளாப் ஆனா என்ன செய்வீங்க...’ செய்தியாளர் கேட்ட கேள்வி.. விஜய் அளித்த நச் பதில்!
‘லைகர்’ திரைப்படம் தோல்வி அடைந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் விஜய்தேவரகொண்டா பதிலளித்துள்ளார்.

‘லைகர்’ திரைப்படம் தோல்வி அடைந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் விஜய்தேவரகொண்டா பதிலளித்துள்ளார்.
லைகர் பிரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய்தேவரகொண்டாவிடம் லைகர் படம் ஃப்ளாப் ஆனால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய், “ இந்தக்கேள்வியை சில வருடங்களுக்கு முன்னர் நீங்கள் கேட்டு இருந்தால், நான் கோபமாக பதிலளித்து இருப்பேன்.கோபமாக இருந்திருப்பேன்.
View this post on Instagram
கடந்த சில நாட்களாக எனக்கு கிடைக்கும் நான் செல்லும் இடமெல்லாம் ஏராளமான அன்பு கிடைக்கிறது. அப்படியிருக்கும் போது, நான் இது போன்ற சின்ன விஷயங்களுக்கு கோபமாக பதிலளித்தால் அவர்களது அன்பை நான் அவவதிப்பது போல ஆகிவிடும். அந்த அன்பு என்னுடைய நினைவில் இருக்கிறது. ரசிகர்கள் மிக முக்கியமானவர்கள். நாங்கள் அவர்களுக்காக வேலை செய்கிறோம். நாங்கள் வெவ்வெறு நகரங்களுக்கு பயணம் செய்து அவர்களது சந்தித்து அவர்களது அன்பை வெற்றிபெற நினைக்கிறோம்” என்று பேசினார்.
View this post on Instagram
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலான நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘லைகர்’. பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இப்படத்தை எழுதி இயக்கிவுள்ளார். இப்படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
View this post on Instagram
குத்துசண்டை வீரராக நடிகர் விஜய்தேவரகொண்டா நடித்துள்ள இந்த படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதன்மூலம் இந்திய சினிமாவில் அவர் நடிகராக அறிமுகமாகிறார்.

