‛அரசியல்னா எனக்கு என்னனே தெரியாது... நான் கண்டிப்பா வர மாட்டேன்’ -நடிகர் விஜய் என்றோ சொன்னது!
25 வருடங்களுக்கு முன்பு விஜய் பேசிய நேர்காணல் இணையத்தில் வைரலாகி வருகிறது
தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்களுள் ஒருவரான நடிகர் விஜய் தனது 48வது பிறந்தநாளை இன்று ஜூன் 22 அன்று கொண்டாடுகிறார். தமிழ்நாட்டில் நடிகர் விஜயின் பிறந்தநாள் பண்டிகையைப் போல அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. நேற்று முதலே சோஷியல் மீடியாவில்விஜயின் பிறந்தநாள் போஸ்டுகள் நிரம்பி வழியத் தொடங்கிவிட்டன. இன்று காலை முதலே ரசிகர்கள், சினிமாத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Advance Birthday wishes Vijay na 🔥🔥🔥#HBDDearThalapathyVijay https://t.co/iK8ailCA0u
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 21, 2022
சமீபகாலமாக விஜய் மைக் முன்னால் நின்றாலே ஃபயர்தான். ஆனால் தன்னுடைய சினிமா தொடக்கக்காலத்தில் மைக்கை பிடித்து கூச்சப்பட்டு பேசும் நபராகவே இருந்துள்ளார் விஜய். அப்படியான ஒரு மேடையில் 25 வருடங்களுக்கு முன்பு பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் விஜய். அரசியல் எண்ட்ரி, அப்பா, அம்மா என பல கேள்விகளுக்கு அவர் நறுக்கென பதிலளித்தார். அந்த கேள்வி பதில் தற்போது வைரலாகி வருகிறது.
Thank you Neyveli pic.twitter.com/cXQC8iPukl
— Vijay (@actorvijay) February 10, 2020
சினிமாவுக்குள் வர வேண்டுமென்பது லட்சியமா? இல்லை அப்பா,அம்மா விருப்பமா?
விஜய்: சினிமாவுக்குள் நான் வர அப்பா, அம்மாதான் காரணம். ஆனால் சினிமாவுக்குள் வந்தது முழுக்க முழுக்க என் விருப்பம்தான். எனக்கு படிப்பு சுத்தமா வராது. நான் டாக்டர் ஆகனும்னு அப்பா, அம்மா ஆசைப்பட்டாங்க. நான் ஆக்டர் ஆகிட்டேன்.
சினிமாவில் இருந்து பலர் அரசியலுக்கு வந்து இருக்காங்க?நீங்க அரசியலுக்கு வருவீங்களா?
நிச்சயமா இல்லை. அரசியல்னா எனக்கு என்னனே தெரியாது. நான் கண்டிப்பா வர மாட்டேன்
உங்க மனைவி குறித்து சொல்லுங்க?
எங்க அம்மா, அப்பா பாத்து வச்ச பொண்ணுதான்.அவங்க தமிழ் பொண்ணு. லண்டனின் செட்டில் ஆனவங்க.
உங்க மனச பாதிச்ச சம்பவம் என்ன? சந்தோஷமான சம்பவம் என்ன?
என்னை பாதிச்ச சம்பவம் எதுன்னா என்னோட தங்கச்சி வித்யா இறந்துபோனது. ரொம்ப சந்தோஷமான தினம்னா அது டிசம்பர் 4 1994. என்னோட முதல்படம் ரிலீஸான நாள்
எப்போதுமே எளிமையா இருக்கீங்களே?இதுதான் உங்க சுபாவமா? இல்லை சினிமாவுக்கு வந்தபிறகு இப்படியா?
நான் எப்பவுமே கூச்ச சுபாவமான பையன் தான். யாராவது கேள்வி கேட்ட பதில் சொல்வேன். அதற்கு மேல என்ன சொல்லனும்னு தெரியாது. நான் இப்படித்தான் இருப்பேன்
உங்கள இந்த அளவுக்கு ஆளாக்கியுள்ள அப்பா, அம்மாவுக்கு என்ன செய்வீங்க?
எங்க அப்பா, அம்மா எனக்கு நிறைய செஞ்சி இருக்காங்க.நான் இந்த அளவுக்கு வந்ததுக்கு காரணம் 50% அப்பா, அம்மாதான்.நான் நல்ல நடிகனாக வரனும்னு என் அப்பா ஆசை. அதைநான் ஓரளவுக்கு செய்துமுடித்துவிட்டேன்.
நேருக்கு நேர் படத்துக்கு பிறகு இரண்டு ஹீரோ சப்ஜெட்ல நடிப்பதில்லையா?
அப்படி நான் சொல்லவே இல்லை.அதெல்லாம் அவங்களா எழுதிகிட்டது. இரண்டு ஹீரோவோ, 3 ஹீரோவோ என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்து கதை பிடித்திருந்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன்