Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
மதுரையில் விஜயின் 50-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த தவெக கட்சியினர்.
விஜய் பிறந்தநாள் விழா
நடிகர் விஜயின் 50-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், தமிழகத்தில் கள்ளச்சாராயம் உயிர் பலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என நடிகர் விஜய் அறிவுறுத்தி இருந்தார். இருந்தாலும் விஜய் ரசிகர்கள், தமிழக வெற்றிக் கழகத்தினர், உள்ளிட்ட பலரும் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை செய்து வருகின்றனர்.
- Vijay Birthday: விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
மதுரையில் பிறந்தநாள் கொண்டாட்டம்
மதுரை அவனியாபுரம் அடுத்த ஈச்சனேரி பகுதியில் தனியார் நாய்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பராமரிப்பு இல்லாத நாய்கள், விபத்தால் காயமடைந்த நாய்கள், மாற்றுத்திறனாளி நாய்கள், ஆதரவற்ற நாய்கள், நோய்வாய் பட்ட நாய்கள்’ என்று ஆதரவு இல்லாத பல்வேறு நாய்களை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு சென்ற நடிகர் விஜயின் ஆதரவாளர் சதீஷ் விஜயின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு வாயில்லா ஜீவன்களுக்கு அசைவ உணவளித்தார். இந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடம் மிகப்பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய்களுக்கும் உணவளித்த த.வெ.க.வினர்
நாய்களுக்கு உதவி செய்து பிறந்தநாள் கொண்டாடிய சதீஷ் கூறும்போது...,”கொரோனா காலகட்டத்தில் அனைத்து தரப்பினருக்கும் அரசு சார்பில் அல்லது தனியார் அமைப்புகள் மூலம் உணவளிக்கப்பட்டது. ஆனால் இப்போது கொரோனா காலத்திற்குப் பிறகு வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்க ஆளில்லாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஆதலால் அவற்றை பராமரித்து வரும் இவ்விடத்திற்கு சென்று அசைவ உணவளித்தேன்” என்று கூறினார். நாய்களுக்கு உணவளித்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
மதுரையில் நெகிழ்ச்சி
கள்ளக்குறிச்சியில் நேர்ந்த கள்ளச்சாராய மரணங்கள் காரணமாக, விஜய் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாமென தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது, குறிப்பிடதக்கது. ஆனாலும், ரசிகர்கள் பல்வேறு விதமாக விஜயின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். மதுரையில் வாயில்லா ஜீவன்களுக்கும் சிறப்பு உணவு வழங்கியது நெகிழ்ச்சிய ஏற்படுதியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Actor Vijay birthday: விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேருந்தில் டிக்கெட் இலவசம் - எங்கு தெரியுமா?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Vijay Birthday: இந்தக் காரணத்தால் டாக்டராக்க நினச்சேன், பிடிவாதத்தால் நடிகனான விஜய்.. எஸ்.ஏ.சந்திரசேகர் பகிர்ந்த தகவல்!