மேலும் அறிய

Vijay Antony: பாஜகவுடன் சேர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக செயல்பட்டேனா... விஜய் ஆண்டனி பரபரப்பு அறிக்கை!

விஜய் ஆண்டனி பாஜகவுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக இந்நிகழ்ச்சியில் குளறுபடிகள் நடக்க சதி செய்ததாக தனியார் யூட்யூப் சேனலில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய தனியார்  யூடியூப் சேனல் மீது வழக்கு தொடர இருப்பதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

பாஜக, விஜய் ஆண்டனி மீது புகார்

தனியார் யூடியூப் சேனல் ஒன்றில், ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சியில் நிகழ்ந்த குளறுபடிகள் குறித்து வெளியாகியுள்ள வீடியோவில், விஜய் ஆண்டனி பாஜகவுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக இந்நிகழ்ச்சியில் குளறுபடிகள் நடத்த சதி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வீடியோவில், “பாஜக யாத்திரைக்காக டைட்டில் பாடலை விஜய் ஆண்டனி கம்போஸ் செய்து கொடுக்கவிருந்தார். ஆனால் முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை தான் அதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது குழு அணுகியது. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்துகொள்ள மாட்டேன் எனக்கூறி அவர்களை திருப்பி அனுப்பி விட்டார். அதனைத் தொடர்ந்து தீனா - கங்கை அமரன் இணைந்து அப்பாடலை கம்போஸ் செய்தனர்.

இந்நிலையில், பாஜக யாத்திரைக்கான பாடலை இசையமைத்து தராததால் கோபமுற்ற அண்ணாமலை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குறி வைத்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்கெனவே மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட அந்த நாளில் நிகழ்ச்சியில் குளறுபடிகளை நிகழ்த்த பேரங்கள் நடைபெற்றன.  ஏசிடிசி நிறுவனத்தினை சேர்ந்த பவித்ரன் ஷெட்டி என்பவர் அண்ணாமலை உடன் சேர்ந்து இதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

ஏ.ஆர்ரஹ்மானுக்கு இந்நிகழ்ச்சியில் கரும்புள்ளி குத்த சதி செய்யப்பட்டது. அப்படி செய்தால் அதன் பின் ஏ.ஆர்.ரஹ்மான் தேர்தல் சமயத்தில் வேறு வழியில்லாமல் பாஜகவை அணுகுவார். தேர்தல் பாடலை அவரை வைத்து கம்போஸ் செய்யலாம் என அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் பாஜகவினருக்கு நெருக்கமாக வலம் வரும் விஜய் ஆண்டனி இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட பொறாமை காரணமாக இந்த சதிவேலைக்கு துணை போயுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் யூடியூப் சேனலின் இந்த வீடியோ இணையத்தில் இன்று காலை முதல் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.

‘மான நஷ்ட வழக்கு தொடருவேன்’

இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியால் தான் வேதனை அடைத்துள்ளதாகவும், விரைவில் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் விஜய் ஆண்டனி தற்போது தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் சிறு மன வேதனையுடன் இந்தக் கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒரு சகோதரி யூடியூப் சேனல் ஒன்றில் என்னைப் பற்றியும் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களையும் தொடர்புபடுத்தி பொய்யான வதந்தி ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.  அது முற்றிலும் பொய். அந்த யூட்யூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். 

மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும் நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Antony (@vijayantony)

கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இந்தத் தகவல் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget