Jailer Update: ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தமன்னா வெளியிட்ட வீடியோ.. பரபரப்பான ஷூட்டிங்
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை, நடிகை தமன்னா வெளியிட்டுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை, நடிகை தமன்னா வெளியிட்டுள்ளார்.
தமன்னா வெளியிட்ட வீடியோ:
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் புதிய திரைப்படம் ஜெயிலர். ரஜினிகாந்தின் 169 திரைப்படமாக உருவாகி வரும், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலையாள நடிகர் மோகன்லால், தெலுகு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஷாக்கி ஷெராஃப் மற்றும் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜெயிலர் பட ஷூட்டிங் ஸ்பாட் - வைரலாகும் வீடியோ!https://t.co/wupaoCzH82 | #nelsonDilipkumar #Tamannaah #Rajinikanth𓃵 #JailerUpdate #cinema @Nelsondilpkumar @tamannaahspeaks @rajinikanth pic.twitter.com/6gTYAHQPW8
— ABP Nadu (@abpnadu) February 24, 2023
வீடியோவில் இருப்பது என்ன?
தமன்னா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், படத்தின் தொழில்நுட்ப குழுவினருடன் இயக்குனர் நெல்சன் ஒரு அறையில் நடந்து கொண்டே பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. வெள்ளியன்று நண்பகல் 12 மணியளவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் பலரும் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
ஜாபர் சாதிக் சொன்ன பதில்:
இதனிடையே, விக்ரம் படத்தின் மூலம் பிரபலமன ஜாபர் சாதிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ”எங்களுக்காக ஜெயிலர் பத்தி ஒரு லைன்ல எதாச்சு சொல்லுங்கனா” என ரசிகர் ஒருவர் கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த ஜாபர் சாதிக், “ரஜினியின் முகம் தெரியவது போன்ற ஒரு புகைப்படத்துடன், ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கா” என பதிலளித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களும் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜெயிலர்:
நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் மற்றும் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்தே ஆகிய இரண்டு திரைப்படங்களுமே மோசமான விமர்சனங்களையே பெற்றுள்ளன. இந்நிலையில், நெல்சன் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் மீது, இருதரப்பு ரசிகர்களும் அதிகப்படியான எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்வது தொடர்பான வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தகக்து. இந்த திரைப்படம் நடப்பாண்டிலேயே வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.