மேலும் அறிய

‛தோண்டி எடுத்து திட்டாதீங்க...’ வீடியோவில் கதறிய ரவுடி பேபியின் ‛சிக்கா’

‛‛ஆரம்பிக்கும் போது நல்லா ஆரம்பிக்கிறான். போக போக... பழையதை தோண்டி எடுத்து திட்றாங்க. எனக்குன்னு ஒரு சுதந்திரம் கிடையாதா... சூர்யா இல்லாத குறையை என்னை வெச்சு பூர்த்தி பண்ணப்பாங்குறீங்க’’ -சிக்கா

‛ஒரு மனுஷனுக்கு எத்தனை துயரம்...’ என வடிவேலு சொல்வதை போல இப்போது எப்போது பார்த்தாலும் புலம்பிக் கொண்டிருக்கிறார் சிக்கா. முன்னாள் டிக்டாக் பிரபலம், இன்னாள் ஹாட்டாக் பிரபலம் என பல பட்டங்களை சுமந்து கொண்டு , அவ்வப்போது சூர்யா தேவிகளிடம் அடியும் வாங்கிக் கொண்டு, ரவுடி பேபி சூர்யாவிடம் மிதியும் வாங்கிக் கொண்டு தனது யூடியூப் பக்கத்தில் மின்கம்பத்தில் கட்டி வைத்திருக்கும் பாட்ஷா ரஜினி போல சிரித்துக் கொண்டிருப்பவர் சிக்கா. 

2 வாரங்களுக்கு முன் சக மாஜி டிக்டாக் பிரபலம் சூர்யா தேவியால் செருப்படிக்கு ஆளாகி, அது தொடர்பான புகாருக்கு நியாயம் கேட்டு வரும் சனிக்கிழமை வரை போலீசாருக்கு கெடி விதித்திருக்கும் சிக்கா, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஞாயிறு அன்று மீசையை எடுப்பதாக கூறியிருக்கிறார். அன்றைய தினம் அந்நியன் தோன்றுகிறார் பாணியில் அனைவர் முன்னிலையில் நேரலையில் தனது மீசையை எடுப்பதாக அவர் ஏற்கனவே அறிவித்தும் விட்டார். இது ஒருபுறம் போய்க்கொண்டிருக்க, மற்றொரு புறம் சிக்காவின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தினசிர அர்ச்சனையை குறிப்பிட்ட சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு தடித்த வார்த்தைகள் அதில் வந்து விழுவதாகவும், அது பற்றியும் 5 நிமிட வீடியோ ஒன்றை சிக்கா வெளியிட்டுள்ளார். இதே சிக்காவின் வீடியோவில் உள்ளவை....

 

‛‛ஒரு வீடியோ போட்டேன். அதில் கேமரா சரியில்லாமல் தெளிவில்லாமல் இருந்தது. அதை ஒருத்தர் கேட்டாரு. உடனே பிரியப்பட்டவங்க ஓபோ, விவோ.. சாம்சாங் ஏதாவது ஒரு போன் அனுப்புங்கனு சொன்னேன். உடனே ஒருத்தன் எனக்கு மெஜஜ் அனுப்புறான்... ‛முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிப்பேன்...’ என்று. உனக்கு வேலை இல்லையா... இல்ல அவங்களுக்கு தான் வேலை இல்லைன்னு நெனச்சியா. எதுக்கெடுத்தாலும் முதல்வர் தனிப்பிரிவுனு மிரட்டுறானுங்க. சும்மா ஒரு பேச்சுக்கு தான் போன் கேட்டேன். நீ எந்த போனும் தரவேணாம்; நான் லென்ஸ் தொடச்சுட்டு வீடியோ போட்டுக்கிறேன். எதுக்கெடுத்தாலும் முதல்வர் தனிப்பிரிவு. ஒருத்தன் எப்போ மீசையை எடுப்பீங்கன்னு கேக்குறான்.

இன்னொருத்தன், ‛ஒரு பக்க மீசையை எடு அப்போ தான் அதை பார்க்கும் போதெல்லாம் வெறி ஏறும்...’னு சொல்றான். ‛மீசையை எடுத்தா போதாது... மொட்டை அடினு..’ ஒருத்தன் சொல்றான். ஒருத்தன் ஒரு படி மேலே போய், ‛ஒரு காதையும் எடுத்துடுனு’ ஒருத்தன் சொல்றான். இதுக்கு முன்னாடி வீடியோவுக்கு மட்டும் தான் இப்படி கமண்ட் போடுவானுங்க. இப்போ வாட்ஸ் ஆப்பில் வந்து தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறீங்க. ஓரளவுக்கு தான் இம்சை கொடுங்கனும். ஓவரா இம்சை பண்றீங்க. கூகுள் பே சஸ்பெண்ட் ஆயிடுச்சு. இப்போ போன் பே பிரச்னை ஆகுது. இரண்டு காதுலயும் ரத்தம் வர்ற அளவு வாட்ஸ்ஆப் ல மெஜேஜ் அனுப்புறாங்க.

ஆரம்பிக்கும் போது நல்லா ஆரம்பிக்கிறான். போக போக... பழையதை தோண்டி எடுத்து திட்றாங்க. எனக்குன்னு ஒரு சுதந்திரம் கிடையாதா... சூர்யா இல்லாத குறையை என்னை வெச்சு பூர்த்தி பண்ணப்பாங்குறீங்க. தாய கட்டையை விட மோசமா உருட்டுறீங்களேடா. முடியலடா வலிக்குதுடா.... ‛நீ சும்மா நேர்த்திகடன் வெச்சிருப்பா, அதை நிறைவேத்த நடிக்கிறேனு,’ ஒருத்தன் சொல்றான். மீசை எடுக்கிறதெல்லாமா நேர்த்தி கடன் வெப்பாங்க. ஓவரா போறீங்க.  இவ்வளவு அழகா இருக்கிறவன தில்லுமுள்ளு ரஜினியா மாத்துறீங்க. தயவு செய்து இப்படி பண்ணாதீங்க...!’’ என வருத்தத்துடன் முடித்துள்ளார் சிக்கா. 

மேலும் இது தொடர்பான செய்திகளுக்கு....

சிக்கா பேசிய அந்த வீடியோ இது தான்...

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget