Vidamuyarchi Update : முழுவீச்சில் 'விடாமுயற்சி' ஷூட்டிங்... இத்தனை மணிநேரம் விடாம நடக்குதா?
Vidaa Muyarchi update : 'விடாமுயற்சி' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்களை சரமாரியாக வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார் சுரேஷ் சந்திரா.
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக திகழும் நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம் குறித்த அப்டேட் குறித்த தகவல் எதுவும் பல மாதங்களாக வெளிவராமல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு சில சூப்பர் அப்டேட்களை கொடுத்துள்ளார் நடிகர் அஜித் மேனேஜரான சுரேஷ் சந்திரா.
'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் ஒப்பந்தமான 'குட் பேட் அக்லி' படத்தில் பிஸியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டது என்ற வதந்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தது படக்குழு. இதன் மூலம் விடாமுயற்சி படம் கைவிடப்படவில்லை என்பதை உறுதி செய்தது.
இதையடுத்து தற்போது சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள தகவலின் படி நடிகர் அஜித் குமார் மனைவியாக திரிஷா நடிக்கிறார் என்றும் தற்போது விடாமுயற்சியின் படப்பிடிப்பில் நடிகர் அஜித், அர்ஜுன், ஆரவ் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கபட்டு வருகின்றன. நடிகர் திரிஷா ஜூலை 2 அல்லது 3 தேதிகளில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் முடிக்க படக்குழு திட்டிமிட்டுள்ளது. மீதம் இருக்கும் சில பேட்ச் பணிகள் மும்பை அல்லது சென்னையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலப்பரப்பு பகுதிகள் 'விடாமுயற்சி' படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. படம் திரையிடப்படும் போது அதன் முக்கியத்துவம் பற்றி மக்கள் அறிந்துகொள்வார்கள் என தெரிவித்தார். ஆரம்ப காலகட்டத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பு ஒரு நாளுக்கு 4 முதல் 5 மணிநேரத்துக்கு நடைபெறும். ஆனால் தற்போது படப்பிடிப்பை விரைவில் முடிக்க வேண்டும் என்பதால் கிட்டத்தட்ட 14 முதல் 15 மணிநேரத்துக்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏதாவது ஒரு அப்டேட் கிடைக்காதா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு விடாமுயற்சி குறித்த இத்தனை அப்டேட் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
‛குட் பேட் அக்லி' படத்தின் செகண்ட் லுக் சமீபத்தில் வெளியானதை அடுத்து விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவினரின் விடாமுயற்சியுடன் 'விடாமுயற்சி' ஷூட்டிங் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.