மேலும் அறிய
Advertisement
Vettaiyan : வேட்டையன் போல கையில் துப்பாக்கியுடன், குதிரையில் வந்த ரஜினி ரசிகர்.. மதுரையில் அதகளம்..
50-வது ஆண்டு விழா கொண்டாடப்பட வேண்டும் எனவும், அதனை மதுரையில் வைத்து கொண்டாடுவதற்கு நடிகர் ரஜினிகாந்த் அனுமதி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் - வேட்டையன் போல கையில் துப்பாக்கியுடன் குதிரையில் ஊர்வலமாக வந்து தேங்காய் சூடம் ஏற்றி பாலபிஷேகம் செய்து கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்
ரஜினியின் வேட்டையன் திரைப்படம்
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியானது. வெளிநாடுகளில் அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிகள் முடிந்து ஏற்கனவே படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதல் காட்சி அதிகாலை 9 மணிக்கு துவங்கி இருக்கிறது. வேட்டையன் படத்தை முன்னிட்டு பல்வேறு தனியார் அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து படத்திற்கான டிக்கெட்களையும் வழங்கியுள்ளது.
ரஜினி ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமில்லை தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களை இன்று திரையரங்குகளில் பார்க்கலாம். இப்படி இருக்க சினிமாவை கொண்டாடும் மதுரையில், வேட்டையன் போல கையில் துப்பாக்கியுடன் குதிரையில் ஊர்வலமாக வந்து தேங்காய் சூடம் ஏற்றி பாலபிஷேகம் செய்து ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.
மதுரையில் வேட்டையன்
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவி்ன் 50-வது ஆண்டு விழா மதுரையில் நடத்த வேண்டும் என ரஜினிக்கு ரசிகர்கள் கோரிக்கை இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று நாடு முழுவதிலும் வெளியானது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று காலை வேட்டையன் திரைப்படம் சிறப்புக் காட்சிகள் வெளியானது. இதனை முன்னிட்டு ஏராளமான ரஜினிகாந்த் ரசிகர்கள் திரையரங்குகளில் முன்பாக பட்டாசுகள் வெடித்தும் ரஜினியின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்து உற்சாகமாக கொண்டாடினர்.
வேட்டையன் வேடமிட்டபடி கையில் டம்மி துப்பாக்கியுடன்..
மதுரை ரயில்நிலையம் அருகேயுள்ள தங்கரீகல் திரையரங்கில் வேட்டையன் திரைப்படம் வெளியான நிலையில் ரஜினிகாந்த் ரசிகர் வேட்டையன் வேடமிட்டபடி கையில் டம்மி துப்பாக்கியை ஏந்தியபடி குதிரையில் ஊர்வலமாக வந்து திரையரங்கிற்கு வருகை தந்தார். இதனைத்தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் திரையரங்கிற்கு இசைவாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து ரஜினிகாந்தின் படத்தின முன்பாக தேங்காய் சூடம் ஏற்றியும் ரஜினியின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
இதேபோன்று மதுரையில் உள்ள பல்வேறு திரையரங்குகளிலும் ரஜினி ரசிகர்கள் வேட்டையன் திரைப்பட வெளியான நிலையில் உற்சாகமாக பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
ரஜினி ரசிகர்கள் வேண்டுகோள்..
செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி ரசிகர்கள், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்த 50-வது ஆண்டு விழா கொண்டாடப்பட வேண்டும். எனவும், அதனை மதுரையில் வைத்து கொண்டாடுவதற்கு நடிகர் ரஜினிகாந்த் அனுமதி தர வேண்டும். என, கோரிக்கை விடுத்தனர். இந்த விழாவில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பிரமுகர்களும் பங்கேற்க வரவேற்க நடிகர் ரஜினிகாந்த், அனுமதிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
திரை விமர்சனம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion