Venom 2 | மார்வெல் ஃபேன்ஸ் ரெடியா! தரமான சம்பவங்கள் காத்திருக்கு! - வெனம் ரிலீஸ் அறிவிச்சாச்சு!
கதாநாயகனான வெனமிற்கும் வில்லனான கார்னேஜுக்கும் இடையே நடக்கும் மோதல்களை இரண்டாம் பாகத்தில் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குநர்
ஹாலிவுட் சூப்பர் ஹீரோஸ் படங்கள் என்றாலே தனி மவுசுதான். அதிலும் மார்வெல் தயாரிக்கும் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். மார்வெல் உருவாக்கிய அத்தனை சூப்பர் ஹீரோக்களும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல இளசுகளுக்கும் ஃபேவரைட். அந்த வரிசையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் வெனம் (venom). இந்த படம் உலக சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. முன்னதாக வெளியான ஸ்பைடர் மேன் படத்தின் மூன்றாம் பாகத்தில் வெனம் என்ற கதபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை ஹீரோவாக மாற்றி ‘வெனம்’ என்ற படத்தை வெளியிட்டிருந்தனர் . அந்த படத்தை ரூபன் ஃபெலிஷர் இயக்க டாம் ஹார்டி கதாநாயகனாக நடித்து அசித்தயிருந்தார். திரில்லர் ஃபேண்டசியாக உருவாகியிருந்த அந்த படம் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கதாநாயகன் தனக்குள் இருக்கும் ’வெனம்’ என்னும் மிருகத்துடன் போராடுவது போலவும், அந்த மிருகம் யார்? எதற்காக தன்னுள் இருக்கிறது என்பதை தேடுவது போலவும் கதைக்களத்தை சுவாரஸ்யம் கலந்து கொடுத்திருப்பார் இயக்குநர்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. 'வெனம்: லெட் தேர் பி கார்னேஜ்' (Venom: Let There Be Carnage.) என இரண்டாம் பாகத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக படத்தின் முதல் டிரைலரை வெளியிட்டிருந்தது தயாரிப்பு நிறுவனமான சோனி. சோனி மற்றும் மார்வெல் இணைந்து தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. டாம் ஹார்டி நடிப்பில் உருவாகியுள்ள 'வெனம்: லெட் தேர் பி கார்னேஜ்'( Venom: Let There Be Carnage) படத்தின் டிரைலரை ரசிர்கள் கொண்டாடினர் . இந்நிலையில் படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழு வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளனர் . அதன்படி படமானது உலகம் முழுவதும் அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் 'வெனம்: லெட் தேர் பி கார்னேஜ்'( Venom: Let There Be Carnage) வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
What can we say, Eddie’s a lucky guy. See #Venom: Let There Be #Carnage exclusively in movie theaters October 1. Get tickets now!
— Sony Pictures (@SonyPictures) September 20, 2021
🎟: https://t.co/7b5ZC2kN7K pic.twitter.com/jWFppq7m7O
முதல் பாகமான வெனம் படத்தின் இறுதியில் கார்னேஜ் என்ற கதாபாத்திரம் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டது. கதாநாயகனான வெனமிற்கும் வில்லனான கார்னேஜுக்கும் இடையே நடக்கும் மோதல்களை இரண்டாம் பாகத்தில் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆண்டி செர்கிஸ் (Andy Serkis) . படத்தில் Woody Harrelson வில்லனாக நடித்துள்ளார். முன்னதாக வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘பேட் மேன்’ படமும் அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸாவதால், படத்தை ஜூலை மாதமே வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழு ஆனால் கொரோனா சூழல் காரணமாக படத்தை திட்டமிட்டப்படி வெளியிட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.