Venkat Prabhu Minnal Murali: ‛என்னா படம்டா...’ சோமசுந்தரம் சார் நீங்க வேற லெவல்.. மின்னல் முரளியை சிலாகித்த வெங்கட் பிரபு!
இயக்குநர் வெங்கட் பிரபு மின்னல் முரளி படத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மின்னல் முரளி படத்தை பாராட்டி நடிகர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ என்ன ஒரு லோக்கல் ஒரு சூப்பர் ஹிரோ படம்.. குரு சோம சுந்தரம்.. வேற லெவல் சார் நீங்க..! நான் உறுதியாக சொல்கிறேன்..MarvelStudios அல்லது dccomic குழு உங்களை விரைவில் சேர்த்துக்கொள்ளும். #MinnalMurali proud என்று குறிப்பிட்டுள்ளார்.
Minnal Murali!!! Bow down guys!! What a local super hero origin movie!!! #GuruSomasundaram vera level saar neenga!! I am sure #MarvelStudios or #dccomics will incorporate u guys soon! Way to go!! #MinnalMurali proud🙏🏽👍🏽
— venkat prabhu (@vp_offl) December 26, 2021
மலையாள நடிகர் டோவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் ஆகியோரது நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘மின்னல் முரளி’.
ஒரு சிறிய கிராமத்தில் வாழும் ஜெய்சன் கதாபாத்திரத்தில் வரும் டோவினா தாமஸ் வேலைக்காக அமெரிக்காவிற்கு செல்ல முயன்று கொண்டிருக்கிறார். அதே கிராமத்தில் யாராலும் மதிக்கப்படாத ஷிபு கதாபாத்திரத்தில் குரு சோம சுந்தரமும் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரையும் மின்னல் தாக்கி விட, இவர்களுக்கு சூப்பர் பவர் கிடைக்கிறது.
இதனை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. மலையாளத்தின் முதல் சூப்பர் ஹிரோ படமாக வெளிவந்திருக்கும் இந்தப்படத்தை இயக்குநர் பாசில் ஜோசஃப் இயக்கி இருக்கிறார். சூப்பர் ஹீரோவுக்கே உரித்தான சாகசங்கள், விறுவிறுப்பான திரைக்கதை உள்ளிட்ட்வற்றால் தற்போது இந்தப்படம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
முன்னதாக, நடிகர் குரு சோமசுந்தரம் தமிழில் ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் நடித்ததின் மூலம் கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த ‘கடல்’ ‘பாண்டிய நாடு’ ‘ஜோக்கர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்