VTK 2nd Look: கொண்டையை மறந்தாரா சிம்பு.... லுங்கி, பனியன் ஒகே.. அதென்ன ஆப்பிள் வாட்ச்? பற்றி எரியும் 'வெந்து தணிந்தது காடு'!
போஸ்டரில் சிம்பு லுங்கி, பனியன் அணிந்திருப்பது எல்லாம் சரிதான். அதென்ன கையில் ஆப்பிள் கடிகாரமா என இணையத்தை கேள்விகளால் துளைத்து வருகின்றனர் இணையவாசிகள்.
வெந்து தணிந்தது காடு இரண்டாவது போஸ்டர் வெளியான நிலையில் சிம்புவின் கையில் ஆப்பிள் வாட்ச் கட்டப்பட்டதாக இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர் இணையவாசிகள்.
கெளதம் மேனன் - சிம்பு இணைந்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியானது. ஒரு சிறிய அறைக்குள் ஒரு இளைஞர் பட்டாளம் அமர்ந்தும், படுத்தும் இருக்க, லுங்கி பனியனுடன் சிம்பு அமர்ந்திருக்கிறார். இந்த செகண்ட் லுக் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. நிச்சயம் இப்படத்தில் சிம்பு வித்தியாசமாக இருப்பார் என நம்புவதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் இந்த போஸ்டர் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.
போஸ்டரில் சிம்பு லுங்கி, பனியன் அணிந்திருப்பது எல்லாம் சரிதான். அதென்ன கையில் ஆப்பிள் கடிகாரமா என இணையத்தை கேள்விகளால் துளைத்து வருகின்றனர் இணையவாசிகள். சிம்புவின் இடது கையில் கடிகாரத்தின் பட்டையைப் போல கருப்பு கலரில் ஒன்று தெரிகிறது.
இது வழக்கமாக சிம்பு அணிந்திருக்கும் கருப்பு கலர் ஆப்பிள் வாட்ச் என பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு ஆதாரமாக சிம்புவின் பழைய புகைப்படங்களையும் இணைத்து ட்வீட்களை தெறிக்கவிடுகின்றனர் டீகோட் மன்னர்கள். அதேவேளையில் அது கடிகாரம் அல்ல எனவும்,இந்த அளவுக்கு அஜாக்கிரதையாக ஒரு படத்தின் லுக் வெளியாகாது எனவும் வெந்து தணிந்தது காடு படக்குழுவுக்கு ஆதரவு குரல்களும் இணையத்தில் பதிவாகி வருகிறது.
முன்னதாக, சிம்புவின் 47 வது படமான உருவாக உள்ள இந்த புதிய படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் ஏற்கெனவே வெளியானது. STR , GVM கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு ’என பெயர் வைக்கப்பட்டது. முதல் போஸ்டர் இணையத்தை கலக்கியது. அதில் சிம்பு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருந்தார். அப்போது கருத்து தெரிவித்திருந்த பலரும், இது உண்மையான புகைப்படம் இல்லை என்றும், கிராபிக்ஸ் மூலம் சிம்புவை காட்டி இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். ஆனால் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக சில நாட்கள் கழித்து சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சிம்பு பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#VendhuThanindhathuKaadu #VTK #STR #SilambarasanTR pic.twitter.com/8pHxvVIKPj
— Silambarasan TR (@SilambarasanTR_) August 27, 2021
#Atman #SilambarasanTR #VendhuThanindhathuKaadu pic.twitter.com/NoJ9VjEGKs
— Silambarasan TR (@SilambarasanTR_) August 13, 2021
#VendhuThanindhathuKaadu
— Silambarasan TR (@SilambarasanTR_) August 6, 2021
Directed by @menongautham
An @arrahman musical &
Produced by @VelsFilmIntl #VTK #SilambarasanTR pic.twitter.com/K2gobu2ZvQ