துப்பாக்கியை வாங்கிவிட்டு சிவகார்த்திகேயன் எஸ்கேப்...வெங்கட் பிரபு படத்தில் நடிக்க தயக்கம்
தி கோட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியானதைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

அமரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனி மார்கெட் பெரியளவில் வளர்ந்துள்ளது. மேலும் தி கோட் படத்தில் விஜய் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியைக் கொடுத்தது அவருக்கு பெரிய பப்ளிசிட்டியாக அமைந்தது. அடுத்தபடியாக சுதா கொங்காரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். தி கோட் படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை இயக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது இந்த படம் குறித்த தகவல் ஒன்றை வலைப்பேச்சு சேனலில் தெரிவித்துள்ளார்கள்.
துப்பாக்கியை வாங்கிவிட்டு சிவகார்த்திகேயன் எஸ்கேப்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கோட் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. சிவகார்த்திகேயனுக்கு கதை சொல்லியிருப்பதாகவும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று வெங்கட் பிரபு தி கோட் பட ப்ரோமோஷனின் போது வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். தற்போது வலைப்பேச்சு பிஸ்மி தனது புதிய வீடியோவில் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தி கோட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் வெங்கட் பிரபு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் தயக்கம் காட்டிவருவதாக இந்த வீடியோவில் பிஸ்மி தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகும் சிவகார்த்திகேயன் 2026 கடைசியில் தான் வெங்கட் பிரபு படத்திற்கு டேட் கொடுப்பதாக தெரிவித்ததாகவும் இதனால் வெங்கட் பிரபு கடுப்பாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SK is ignoring #VP because of #GOAT
— Vignesh S (@svigneshchn) March 19, 2025
- Universally accepted that #GOAT is a bad movie
- #SK got #Thuppaki in GOAT but has run away because of GOAT
- #VP desperately trying to contact #Sivakarthikeyan #Yuvan also got a setback because of GOAT. Now VP.
The company you keep… pic.twitter.com/6rvVmcbKOo
வலைப்பேச்சு சேனலி தெரிவிக்கப்படும் தகவல் பெரும்பாலும் தவறானவை என்பது பரவலான விமர்சனமாக இருந்து வருகிறது. சமீபத்தில் நடிகர் வைபவ் அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் படம் தள்ளிப்போவதாகவும் அதற்கு இடையில் வெங்கட் பிரபு கோவா 2 இயக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

