சர்வதேச வாசிப்பு நாள்!
மார்ச் 19 சர்வதேச வாசிப்பு நாளாகக் கொண்டாப்படுகிறது(International read to me day)
பெரியவர்கள் குழந்தைகளுக்குப் புத்தகங்களை படித்து காட்டுவதற்கும், குழந்தைகளின் கேட்டல் திறனை அதிகரிக்கவும் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது
இந்த தினத்தின் நோக்கம், கல்வியறிவு, சமூக பிணைப்புகளை வலுப்படுத்துதல், கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி போன்றவற்றை குழந்தைகளிடம் உண்டாக்கவே
இது குழந்தைகள் கவனிக்கும் திறனை அதிகப்படுத்துவது மட்டுமில்லாமல் புத்தக வாசிப்பின் ஆர்வத்தை தூண்டும்
எனக்கு வாசித்து காட்டுங்கள் என்பதே இந்த தினத்தின் முக்கிய கூற்றாகும். இதனால் அவர்களின் கற்பனை திறன் அதிகரித்து கல்வியறிவில் முன்னதாக இருப்பார்கள்
இந்த தினத்தில் குழந்தைகளையும் படிக்க வைத்து ஊக்கப்படுத்தி, ஒரு நல்ல அனுபவத்தையும் பெற சிறந்த நாளாகும். இதன் மூலம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உள்ள உறவு அதிகரிக்கும்
இந்த நாளில் புத்தகங்களை பள்ளிகளுக்கு, நூலகத்திற்கு மற்றும் குழந்தைகள் மருத்துவனைக்கு நன்கொடை செய்யலாம்
சர்வதேச குழந்தைகள் தினம் புத்தகம் வாசிப்பதற்கான அவசியமும் ஆர்வத்தையும் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கிறது