மேலும் அறிய

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்

சசிகுமார் நடிப்பில் வெளியான ‘வதந்தி சீசன் 2’ எப்படி இருக்கிறது? கதை, நடிப்பு, திரைக்கதை, கிளைமாக்ஸ் உள்ளிட்ட முழுமையான விமர்சனம்.

2022-ல் வெளியானவதந்திதி ஃபேபிள் ஆஃப் வெலோனிதொடரின் இரண்டாவது சீசன், ‘வதந்திதி மிஸ்டரி ஆஃப் மணிஎன்ற பெயரில் ஆகஸ்ட் 7 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. முதல் சீசனில் எஸ்.ஜே.சூர்யா காவல் அதிகாரியாக நடித்த நிலையில், இரண்டாவது சீசனில் அந்த இடத்தை சசிகுமார் ஏற்றுள்ளார். முதல் சீசனின் கதைக்கும் இரண்டாவது சீசனுக்கும் நேரடி தொடர்ச்சி இல்லை என்பதால், முதல் சீசனை பார்க்காதவர்களும் இதை தனியாகப் பார்க்க முடியும்.

வதந்தி சீசன் 2 கதை

மதுரையில் நடைபெறும் நெடுஞ்சாலைப் பணியின்போது இரண்டு எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றன. அவை யாருடையவை என்ற விசாரணை தொடங்கும்போது, அந்த வழக்கு ஜல்லிக்கட்டு வீரரான மணியை நோக்கிச் செல்கிறது. மணியின் சகோதரி மற்றும் காதலி ஆகியோரின் உடல்களாக அவை அடையாளம் காணப்படுகின்றன. ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருக்கும் மணி கொலைக்குற்றவாளி என முடிவு செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

ஆனால், இந்த வழக்கை விசாரிக்கும் காவல் ஆய்வாளர் மூசா ராஜாவுக்கு மணிதான் குற்றவாளி என்ற முடிவில் சந்தேகம் ஏற்படுகிறது. வழக்கு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக கருதப்படும் நிலையில், அதனை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க அவர் முடிவு செய்கிறார். அங்கிருந்து தொடங்கும் விசாரணை, பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த உறவுகள், குடும்ப ரகசியங்கள், சமூக அழுத்தங்கள் மற்றும் அரசியல் பின்னணிக்குள் செல்கிறது.

சசிகுமாருக்கு பொருத்தமான கதாபாத்திரம்

மூசா ராஜாவாக சசிகுமார் இந்தத் தொடரின் மிகப்பெரிய பலங்களில் ஒருவராக இருக்கிறார். வழக்கமான சினிமா போலீஸ் கதாபாத்திரம் போன்று அதிரடி காட்டும் அதிகாரியாக இல்லாமல், அமைதியாகவும் பொறுமையாகவும் விசாரணையை நகர்த்தும் காவல் அதிகாரியாக அவரது கதாபாத்திரம் எழுதப்பட்டுள்ளது.

மூசா ராஜா மத நம்பிக்கையுடன் இருப்பவர். மனைவி கர்ப்பமாக வேண்டும் என்பதற்காக ஹஜ்ஜுக்குப் பிறகு தாடியை எடுக்காமல் இருப்பது, அதற்காக மேலதிகாரிகளுடன் மோதுவது போன்ற விஷயங்கள் அவரது தனிப்பட்ட குணத்தை அறிமுகப்படுத்துகின்றன. ஆனால், இந்தக் காட்சிகள் முக்கிய விசாரணைக் கதையுடன் பெரிய அளவில் இணைக்கப்படவில்லை. சசிகுமார் அதிகப்படியான உடல் மொழி அல்லது வசன உச்சரிப்பை பயன்படுத்தாமல் கதாபாத்திரத்தை இயல்பாகக் கொண்டு செல்கிறார்.

யஷ்வந்தின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது

மணியாக நடித்துள்ள யஷ்வந்த் மற்றொரு முக்கியமான பலம். ஜல்லிக்கட்டு வீரர், காதலன், குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், கொலைக் குற்றச்சாட்டில் சிக்கிய கைதி என பல்வேறு நிலைகளில் தோன்றும் கதாபாத்திரத்தை அவர் நம்பும்படியாக கையாண்டுள்ளார்.

மதுரை வட்டார மொழி, உடல் மொழி, உணர்ச்சிக் காட்சிகள் ஆகியவற்றில் அவரது நடிப்பு இயல்பாக இருக்கிறது. குறிப்பாக மணியின் பின்னணியைச் சுற்றி கதை நகரும்போது யஷ்வந்தின் கதாபாத்திரம் தொடருக்கு தேவையான உணர்ச்சியை வழங்குகிறது.

முதல் பாதி விறுவிறுப்பு... நடுப்பகுதியில் சறுக்கல்

வதந்தி 2’வின் தொடக்க அத்தியாயங்கள் தொடரை வேகமாக உள்ளே இழுக்கின்றன. எலும்புக்கூடுகள், மணியின் கைது, மூசாவின் சந்தேகம் என ஒவ்வொரு தகவலும் அடுத்த கேள்வியை உருவாக்குகிறது. விசாரணை முன்னேறும்போது உண்மைக்கும் வதந்திக்கும் இடையிலான எல்லையைத் தேடும் தொடரின் மையக் கருத்தும் நன்றாக வேலை செய்கிறது.

ஆனால் நடுப்பகுதியில் திரைக்கதை சில இடங்களில் தடுமாறுகிறது. மணியின் கடந்தகாலம் மற்றும் காதல் வாழ்க்கையை விரிவாகக் காட்டும் பகுதிகள் விசாரணையின் வேகத்தை குறைக்கின்றன. குறிப்பாக காதல் மற்றும் குடும்பப் பின்னணிக்கான காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு உணர்ச்சியை உருவாக்கவில்லை

தொடரின் விசாரணை நடைமுறை ஆரம்பத்தில் மெதுவாக இருந்தாலும், அதன் ரிதமுக்குள் பார்வையாளர்கள் படிப்படியாகச் செல்ல முடிகிறது . ஆனால் பின்னர் கதை தன்னைத் தானே பல முறை திருப்பிக் கொள்ளும் விதம் அதன் பலவீனமாக மாறுகிறது

முதல் சீசனை உருவாக்கிய ஆண்ட்ரூ லூயிஸே இரண்டாவது சீசனையும் எழுதி இயக்கியுள்ளார். புஷ்கர்காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக இருக்கும் நிலையில், வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தொடரை தயாரித்துள்ளது. எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த சீசனில் சசிகுமார், யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மதுரை, கிராமப்புற வாழ்க்கை, ஜல்லிக்கட்டு மற்றும் நெடுஞ்சாலைத் திட்டம் ஆகியவற்றை விசாரணைக் கதைக்குள் கொண்டு வந்திருப்பது தொடரின் சிறப்பு. கிராமத்தின் நிலப்பரப்பு, மக்கள் மற்றும் உள்ளூர் சூழலை செயற்கையாக இல்லாமல் பதிவு செய்திருப்பது சிறப்பு

தொடரின் மிக முக்கியமான பலமாக அதன் இறுதிப்பகுதியை குறிப்பிடலாம். விசாரணை பல்வேறு திசைகளில் சென்று சில நேரங்களில் பார்வையாளர்களின் பொறுமையை சோதித்தாலும், இறுதியில் வரும் திருப்பம் முக்கியமான கேள்விகளுக்கு பதில் கொடுக்கிறது.

முதல் சீசனைப் போல ஒவ்வொரு கட்டத்திலும்யார் சொல்வது உண்மை?” என்ற சந்தேகத்தை உருவாக்குவதற்கு பதிலாக, இந்த சீசன் ஒரு போலீஸ் விசாரணை நடைமுறையாக அதிகம் செயல்படுகிறது. இதனால் மர்மத்தின் த்ரில் குறைகிறது .

பின்னணி இசையும் காட்சியமைப்பும்

சைமன் கே. கிங் இசையமைத்துள்ள பின்னணி இசை, விசாரணையின் பதற்றத்தை அதிகரிக்கிறது. கதை சில இடங்களில் மெதுவாக நகரும் நேரங்களிலும் இசை அந்த சூழலை தாங்கிச்செல்கிறது

மொத்தத்தில் எப்படி?

வலுவான தொடக்கம், சசிகுமாரின் இயல்பான நடிப்பு, யஷ்வந்தின் சிறப்பான பங்களிப்பு, மதுரை களப்பின்னணி, நம்பகமான உலக உருவாக்கம் மற்றும் திருப்திகரமான கிளைமாக்ஸ் ஆகியவை தொடரின் முக்கியமான பலங்கள். அதே நேரத்தில், நடுப்பகுதியில் வரும் தேவையற்ற துணைக் கதைகள், சில இடங்களில் நீளும் விசாரணை, காதல் பகுதிகளில் போதிய அழுத்தம் இல்லாமை மற்றும் சில திரைக்கதை வசதிகள் அதன் வேகத்தை குறைக்கின்றன.

மர்மத்தை விட விசாரணை நடைமுறையை மையமாகக் கொண்ட குற்றத் தொடர்களை விரும்புபவர்களுக்குவதந்தி 2’ நிச்சயமாக ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். ஆனால் முதல் சீசனைப் போல தொடர்ந்து அடுத்த திருப்பத்தை ஊகிக்க வைக்கும் பரபரப்பான மர்மத் தொடரை எதிர்பார்த்தால், சில இடங்களில் ஏமாற்றம் ஏற்படலாம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
Embed widget