Vaathi Digital Rights: தனுஷின் ‘வாத்தி’ டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தனுஷ் நடிப்பில் டிசம்பர் 2ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் வாத்தி(Vaathi) படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான ஆகா தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தனுஷ் நடிப்பில் டிசம்பர் 2ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் வாத்தி படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான ஆகா தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக உள்ளார். அவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது, அவரது நடிப்பில் நானே வருவேன் திரைப்படமும் திரையரங்கில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது அவர் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் வாத்தி திரைப்படம் வரும் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்கில் வெளியாகிறது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சீதாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் நாக வம்சி, சாய்சவுஜன்யா இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சக்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சாய்குமார், தணிகெல்லா பரணி ஆகியோரும் நடித்துள்ளனர்.