Vetrimaaran Vaadivaasal Update: பரபரவென நடக்கும் வாடிவாசல் வேலை.. படத்துல இது இருக்கும்.. ஜிவி பிரகாஷ் சொன்ன அப்டேட்!
Vetrimaaran Vaadivaasal Update: வாடிவாசல் படம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் பேசியிருக்கிறார்.
‘வாடிவாசல்’ படத்தின் தற்போதைய அப்டேட் குறித்து அந்தப்படத்தின் படத்தின் இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் குமார் பேசியிருக்கிறார். இது குறித்து ட்விட்டர் லைவ்வில் அவர் பேசும் போது, “ வெற்றியும் நானும் நிச்சயமாக ஒரு வெற்றி கூட்டணி. இப்போது நாங்கள் வாடிவாசல் படத்திற்காக வொர்க் பண்ணிக்கொண்டிருக்கிறோம். 2,3 பாடல்கள் ஆல்ரெடி கம்போஸ் செய்து முடித்து விட்டோம்.
View this post on Instagram
ஒரு ராவானா, ஃபோக் மியூஸிக்காவும், ஃபோக்கோட எக்ஸ்ட்ரீமாவும் இசை இருக்கும். இதுமட்டுமல்லாம நேட்டிவ் சார்ந்த ஒரு ரஸ்டிக்கான மியூசிக்காவும் பாடல்கள் இருக்கும்.” என்று பேசினார்.
#VaadiVaasal Update🔥🔥@Suriya_offl @gvprakashhttps://t.co/N9Jwrl72PG pic.twitter.com/C1OxmwV0M2
— 🐈🖤 (@RazakSuriya) March 5, 2022
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநருமான வெற்றிமாறன் சூர்யாவுடன் முதன்முறையாக வாடி வாசல் படத்தில் இணைந்திருக்கிறார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட இருக்கிறது.
கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப்படத்தில் இருந்து, முன்னதாக போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்ட நிலையில், பேட்டி ஒன்றில் வெற்றிமாறன், காளை ஒன்றுடன் சூர்யா பழக வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான் ஜிவி பிரகாஷ் குமார் பேசியிருக்கிறார்
#வாடிவாசல் #Vaadivasal pic.twitter.com/smEdgnavXL
— Vetri Maaran (@VetriMaaran) July 23, 2020