Liger box office collection Day 1: ‛முதல் காட்சியிலேயே முடிந்தது கதை’ லைகர் படத்தின் முதல் நாள் வசூல் இதுதான்!
Liger Box Office Collection Day 1: விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘லைகர்’ படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளன.
விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘லைகர்’ படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளன.
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலான நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் இயக்குநர் பூரிகெகன்நாத் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் ‘லைகர்’.மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்ததிரைப்படம், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை என்பது படத்தின் முதல்காட்சி முடிந்த உடனேயே தெரிந்தது. இதனால் அடுத்தடுத்த காட்சிகளில் மக்கள் கூட்டம் மிக குறைவாக காணப்பட்டது.
View this post on Instagram
இந்த நிலையில் இந்தப்படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, லைகர் திரைப்படம் உலக அளவில் உலக அளவில் 20 முதல் 25 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை லைகர் திரைப்படம் 15.30 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தெலுங்கு : 13.79 கோடி
இந்தி: 1.1 கோடி
தமிழ்: 0.3 கோடி
மலையாளம்: 0.1 கோடி
கன்னடம்: 0.01 கோடி
இப்படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் விமர்சனத்தை படிக்க >> Liger Movie Review: மனோகரா... எம்.குமரன் S/O மகாலட்சுமி... அப்டேட் வெர்சனா லைகர்? படம் முடிந்ததும் முதல் விமர்சனம்!
முன்னதாக படம் ஃப்ளாப் ஆனால் என்ன செய்வீர்கள் என்று விஜய்தேவரகொண்டாவிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்:-இந்தக்கேள்வியை சில வருடங்களுக்கு முன்னர் நீங்கள் கேட்டு இருந்தால், நான் கோபமாக பதிலளித்து இருப்பேன்.கோபமாக இருந்திருப்பேன்.
View this post on Instagram
கடந்த சில நாட்களாக எனக்கு கிடைக்கும் நான் செல்லும் இடமெல்லாம் ஏராளமான அன்பு கிடைக்கிறது. அப்படியிருக்கும் போது, நான் இது போன்ற சின்ன விஷயங்களுக்கு கோபமாக பதிலளித்தால் அவர்களது அன்பை நான் அவவதிப்பது போல ஆகிவிடும். அந்த அன்பு என்னுடைய நினைவில் இருக்கிறது. ரசிகர்கள் மிக முக்கியமானவர்கள். நாங்கள் அவர்களுக்காக வேலை செய்கிறோம். நாங்கள் வெவ்வெறு நகரங்களுக்கு பயணம் செய்து அவர்களது சந்தித்து அவர்களது அன்பை வெற்றிபெற நினைக்கிறோம்” என்று பேசினார்.