Uorfi Javed : செத்துட்டேனா? அஞ்சலி போஸ்டரால் ஷாக்கான ஊர்வி! கடுப்பில் இன்ஸ்டா போஸ்ட்!
இறந்துவிட்டதாக தன்னைக் குறித்து வதந்தி பரப்பியவர்கள் குறித்து கோபமாக ஊர்வி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்
இன்ஸ்டா, சமூக வலைதள பகிர்வுகள் குறிப்பாக புகைப்படங்கள் மூலம் எப்படியும் வைரலாகிவிட வேண்டுமென்று சோஷியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்கும் நடிகை ஊர்வி ஜாவேத். ட்ரோல் ஆனாலும் பரவாயில்லை ஊடக வெளிச்சத்திற்கு வந்தால் போதும் என்று வரும் கேட்டகரி இவர். சர்ச்சையைக் கிளப்ப வேண்டுமென்றே ஆடையை அணிந்து வரும் ஊர்வி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சர்ச்சை மட்டுமின்றி வதந்தி ஒன்றில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளார்.
தொலைக்காட்சி பிரபலமான உர்ஃபி ஜாவேத் 2016ல் படே பய்யா கி துல்ஹனியா என்ற தொடரில் அவ்னி பந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களைப் பெற்றார். அதன் பின்னர் சந்திரா நந்ஹினி, சாத் ஃபேரோ கி ஹீரா ஃபேரி, பெப்பன்னா, ஜிஜி மா, ஆயி மேரே ஹம்சஃபர் என பல தொடர்களில் நடித்து தனது ஃபேன்ஸ் கிளப்பை விஸ்தரித்து வைத்துள்ளார்.பிக்பாஸில் கலந்து கொண்டார். அதன் மூலம் அவர் மீது இன்னும் இன்னும் அதிகமாக ஊடக வெளிச்சம் பாய்ந்தது.
View this post on Instagram
இந்நிலையில், அந்த வெளிச்சம் எல்லாம் பத்தாது என்பதுபோல் அவ்வப்போது தனது இன்ஸ்டா, சமூக வலைதள பகிர்வுகள் குறிப்பாக புகைப்படங்கள் மூலம் லைம் லைட்டுக்கு வருவார். இந்நிலையில் உர்பி தற்கொலை செய்துகொண்டதாகவும் அது தொடர்பான போட்டோவையும் சிலர் பொய்யாக சோஷியல்மீடியாவில் பரப்பினர்.இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ஊர்வி, ''இந்த உலகத்துக்கு என்ன ஆனது. எனக்கு பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் வரும்.இப்போது இப்படி.கொலைக்காரருடன் துணை நிற்கிறேன் என ஒருவர் காமெண்ட் செய்துள்ளார்''. எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே நாளிதழை வைத்து ஊர்வி பதிவிட்ட ரீசண்ட் வீடியோ வழக்கம்போல் சர்ச்சையை கிளப்பியவாறே வைரலாகி வருகிறது. Be Yourself என எழுதப்பட்ட பேப்பரை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram