Inban Udhayanidhi:நடிகராக அறிமுகமாகும் இன்பன் உதயநிதி! இயக்குனர் யார் தெரியுமா?
Inban Udhayanidhi: முதலமைச்சர் ஸ்டாலினின் பேரனும், துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்பன் உதயநிதி நடிக்கும் முதல் படத்தை இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Inban Udhayanidhi: முதலமைச்சர் ஸ்டாலினின் பேரனும், துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்பன் உதயநிதி நடிக்கும் முதல் படத்தை இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜின் அடுத்த படம்:
கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் கராத்தே வெங்கடேஷன், மாரிமுத்து, பூ ராம், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். பரியேறும் பெருமாள் விமர்சன ரீதியாகாவும் வணிக ரீதியிலும் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு கர்ணன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். பின்னர், உதயநிதி ஸ்டாலினை வைத்து 2023 ஆம் ஆண்டு மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் தான் இருவருக்குமான நட்பு அதிகமானது.
நடிகராக அறிமுகமாகும் இன்பன் உதயநிதி:
இச்சூழலில் தான் முதலமைச்சர் ஸ்டாலினும் பேரனும், துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்பன் உதயநிதி தமிழ் சினிமாவில் நயகனாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இன்பன் உதயநிதி நடிக்க இருக்கும் முதல் படத்தை இயக்குவது குறித்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களை உதயநிதி தரப்பு அணுகியதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் மாரிசெல்வராஜ் இன்பன் உதயநிதியை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள பைசன் திரைப்படத்தை பார்த்து விட்டு உதயநிதி மாரிசெல்வராஜிடம் பேசியதாகவும் நல்ல வலுவான ஒரு கதையில் இன்பன் உதயநிதியை நடிக்க வைப்பதற்கான கதையை மாரிசெல்வராஜ் எழுதி வருவதாகாவும் சொல்கின்றனர் சினிமா வட்டாரங்களில். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இன்பன் நடிப்பு பயிற்சி மேற்கொள்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.




















