Tamil TV actress Wish : தமிழ் சீரியல் நடிகைகளின் மகளிர் தின கொண்டாட்டம்..!
மகளிர் தினமான இன்று சின்னத்திரையின் பிரபல நடிகைகள் மகளிர் தின வாழ்த்துகளை பதிவிட்டுள்ளனர்.
![Tamil TV actress Wish : தமிழ் சீரியல் நடிகைகளின் மகளிர் தின கொண்டாட்டம்..! tv serial celebrity wishes to womens day their social media Tamil TV actress Wish : தமிழ் சீரியல் நடிகைகளின் மகளிர் தின கொண்டாட்டம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/08/4e877e2a8c03aac4061173d7f29b1b5c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆண்டுதோறும் மார்ச் 8-ந் தேதி மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால், இன்றும் கோலாகலமாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அலுவலகங்கள், வீடுகள், சாலைகள், கடைகள் என்று பல இடங்களில் மகளிர் தினங்களை வாழ்த்துகளுடன் பலரும் கொண்டாடினர். திரைப்பிரபலங்கள் பலரும் மகளிர் தின வாழ்த்துகளை கூறியுள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளித்திரை பிரபலங்கள் மட்டுமின்றி சின்னத்திரை பிரபலங்களும் தங்களது மகளிர் தின வாழ்த்துகளை பரிமாறியுள்ளனர். பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதாதனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உங்களது மவுனத்திற்கு தகுதியானவர்களிடம் உங்களது வார்த்தைகளை வீணாக்காதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், தனது இந்த பதிவிற்கு மேல் மகளிர் தின வாழ்த்துகள் என்றும் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமான நடிகை சுஜா வருணி மகளிர் தினமான இன்று பிரபல மூத்த நடிகையும், மக்கள் நீதிமய்யத்தின் முக்கிய நிர்வாகியுமான ஸ்ரீப்ரியாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படத்தின் கீழே “ நாங்கள் அனைவரும் ஒன்றுதான். நாங்கள் பெண்கள். துணிச்சலனா மற்றும் அன்பான பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக” என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
இவர்கள் அனைவருக்கும் மேலாக பாக்கியலட்சுமி தொடர் மூலம் மிகவும் புகழ்பெற்ற நடிகை ரித்தியாவின் மகளிர் தின வாழ்த்து மிகவும் வைரலாகி வருகிறது. இவர் விமானத்தில் பயணம் செய்தபோது கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவை சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மகளிர் தினமான இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
மேலும், அந்த புகைப்படத்திற்கு கீழே மகளிர் தினத்தில் அவரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த அற்புதமான நாளில் அழகான மற்றும் வலிமையான பெண்கள் அனைவருக்கும் இனிய மகிழ்ச்சியான பெண்கள் தின வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : Bharathi Kannamma: தயவுசெஞ்சு இதைப் பண்ணுங்கப்பா.. பாரதி கண்ணம்மா இயக்குநரிடம் ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை..
மேலும் படிக்க : அவங்க தைரியமானவங்க.. உறுதியானவங்க.. தினமும் இதுதான்.. நயன்தாராவைக் கொண்டாடும் விக்னேஷ் சிவன்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)