மேலும் அறிய

Chandrika Saha: 3 முறை தரையில் அடிக்கப்பட்ட 15 மாத குழந்தை.. கணவர் மீது புகாரளித்த பிரபல சீரியல் நடிகை

15  மாத குழந்தையை தரையில் அடித்ததாக பிரபல தொலைக்காட்சி நடிகை சந்திரிகா சாஹாவின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

15  மாத குழந்தையை தரையில் அடித்ததாக பிரபல தொலைக்காட்சி நடிகை சந்திரிகா சாஹாவின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ரசிகர்களை கவர்ந்த சந்திரிகா சாஹா

அதாலத், சிஐடி மற்றும் சவ்தான் இந்தியா: கிரைம் அலர்ட் போன்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சந்திரிகா சாஹா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தொழில் அதிபரான அமன் மிஸ்ராவை சந்தித்த நிலையில் இருவரும் காதலித்தனர். தொடர்ந்து லிவிங் டுகெதர் உறவில் இருந்த சந்திரிகா கர்ப்பமானார். இதனையறிந்த  அமன், சந்திரிகாவை கருக்கலைப்பு செய்ய வலியுறுத்த இருவருக்குள்ளும் பிரச்சினை எழுந்தது. அதேசமயம் சந்திரிகாவை பரிசோதித்த டாக்டர்களும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சந்திரிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

இதனையடுத்து இந்த குழந்தைக்கு 14 மாதங்கள் கடந்த நிலையில் கடந்த மாதம் 41 வயதான சந்திரிகாவும், 21 வயதான அமனும் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால் அவர்களுக்கு அடிக்கடி சண்டை எழுந்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் சந்திரிகா சாஹா தனது கணவர் அமன் மிஸ்ரா மீது போலீசில் புகாரளித்துள்ளார். 

கணவர் மீது புகார்

அதன்படி தங்களது 15 மாத குழந்தையை அமன் 3 முறை தரையில் அடித்து காயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தையில் படுக்கையறையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் அவர் சமர்பித்துள்ளார். தாக்குதல் சம்பவம் நடந்த போது தான் சமையலறையில் இருந்ததாகவும் , மகன் அழும் சத்தம் கேட்டதாகவும் சந்திரிகா தெரிவித்துள்ளார். தான் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறும் அமனிடம் சொல்லிவிட்டு சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை படுகாயத்துடன் கிடந்ததாகவும்- குறிப்பிட்டுள்ளார்.  மேலும் மலாடு மேற்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: Custody Movie Review: "கஸ்டடி" ரசிகர்களை கட்டிப்போட்டதா..? கடுப்பேற்றியதா..? இதோ சுடச்சுட விமர்சனம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget