Suriya Fans: ‘போர் நிறுத்து’: ரஷ்யா - உக்ரைன் போருக்கு எதிராக களமிறங்கிய சூர்யா ரசிகர்கள்
ஏற்கனவே சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்று இருந்த நிலையில் எதற்கு துணிந்தவன் திரைப்படத்தின் மீது அவரது ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்புவுடன் காத்திருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள 3 திரையரங்குகளில் நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் சிறப்பு காட்சிக்கு வந்த ரசிகர்கள் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக பதாகைகளுடன் வந்தது மட்டுமின்றி, அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டு மனிதம் மலர வேண்டும் என்று 2 நிமிடம் மௌன கூட்டுபிராத்தனையும் செய்தனர்.
இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்று இருந்த நிலையில் எதற்கு துணிந்தவன் திரைப்படத்தின் மீது அவரது ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்புவுடன் காத்திருந்தனர்.
மேலும் ஜெய்பீம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி தொடர்பாக பா.ம.க மற்றும் வன்னியர் சமூகம் சேர்ந்த அமைப்புகள் தொடர்ந்து நடிகர் சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அது மட்டுமின்றி எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தமிழகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகியுள்ளது.
திரையரங்குகளில் பிரச்சினை ஏற்படமால் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எஸ்.பி.டி.சினிமா, லட்சுமி, சண்முகா என 3 திரையங்குகளில் நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் காலை 8 மணிக்கு ரசிகர்களின் சிறப்பு காட்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இதில் சண்முகா திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ரசிகர் சிறப்பு காட்சிகளுக்கு வந்த நடிகர் சூர்யா ரசிகர்கள் ரஷ்யா- உக்ரைன் இடையிலான போரை நிறுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி, அது தொடர்பான வாசகங்களுடன் திரைப்படம் பார்க்க சென்றது மட்டுமின்றி, நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சரமாரியப்பன் தலைமையில், போரினை நிறுத்த வலியுறுத்தியும், அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக 2 நிமிடங்கள் மௌனமாக நின்று பிராத்தனை செய்தனர். ஏற்கனவே எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழாவின் போது நடிகர் சூர்யா ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் கூறித்து பேசியது மட்டுமின்றி, அங்குள்ள மக்களுக்கு கூட்டு பிராத்தனை செய்ய வேண்டும் என்று கூறி 2 நிமிடங்கள் மௌனமாக இருந்து பிராத்தனை செய்த நிலையில், அவரது வழியில் கோவில்பட்டியில் ரசிகர்களும் பிராத்தனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்