மேலும் அறிய

Trisha | பிட்னஸா? பெட்ரோல் விலை உயர்வா? சைக்கிளிங் நாயகிகளிடம் கேள்வியெழுப்பும் இணையவாசிகள்!

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் திரிஷா கிருஷ்ணன் சைக்கிள் வாங்கிய கதைதான் தற்போது ' டாக் ஆஃப் தி டவுனாக' இருக்கிறது

மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக பல இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை திரிஷா. கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கோலோச்சி வருகிறார். அஜித், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோக்களுடன் ஜோடிப்போட்ட நடிகை திரிஷா சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.திரிஷா தற்போது  கர்ஜனை, ராங்கி, சுகர், 1818 ,சதுரங்க வேட்டை-2, ஆகிய தமிழ் படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும்  பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Trisha | பிட்னஸா? பெட்ரோல் விலை உயர்வா? சைக்கிளிங் நாயகிகளிடம் கேள்வியெழுப்பும் இணையவாசிகள்!

 

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் திரிஷா கிருஷ்ணன் சைக்கிள் வாங்கிய கதைதான் இப்போது டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது.நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் திரிஷா புகைப்படம் ஒன்றை பதிவேற்றியிருந்தார் அதில் “ நீங்கள் நல்ல மனநிலையில் இருந்துதான் ஒரு சவாரி செய்ய வேண்டும், இதோ எனது புதிய சைக்கிள் “ என குறிப்பிட்டிருந்தார். இதனை கண்ட நெட்டிசன்கள் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டதைத்தான் திரிஷா மறைமுகமாக சாடுகிறாரா என வைரலாக்க தொடங்கிவிட்டனர். புதிய சைக்கிள் வாங்கிய திரிஷா அதனை ஓட்டிக்கொண்டே வீடு வரைக்கும் சென்றுள்ளார் போலும். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த புகைப்படங்களில் கமெண்டுகளில் சிலர் “பெட்ரோல் வாங்க கூடவா உங்களிடம் காசு இல்லை “ என நகைத்தும் வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)


இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத அளவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி பல  அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே பிரபலங்கள் யாரேனும் புதிய சைக்கிள் வாங்கினாலோ அல்லது சைக்கிளில் பயணம் செய்தாலோ அதிகம் கவனிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோனும் கூட ஒரு சைக்கிள் வாங்கியிருந்தார். இன்ஸ்டாகிராம் வாயிலாக புகைப்படத்தை பகிர்ந்த சன்னி “ பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துவிட்டால் , நீங்கள் உங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ”என குறிப்பிட்டிருந்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

 

 

பெட்ரோல் விலை உயர்வையும் தாண்டி நடிகர் நடிகைகள் பெரும்பாலும் ஃபிட்னஸில் கவனம் செலுத்துவதில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களுக்கு வழிக்காட்டும் பயிற்சியாளர்கள்  சைக்கிளிங் செய்வதற்கு அவர்களை  ஊக்குவிக்கின்றனர். இதுவே அவர்கள் சைக்கிளை தேர்வு செய்வதற்கான முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget