மேலும் அறிய

ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?

பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் BMW i5 LWB மின்சார காரான -காரின் முன்பதிவு தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இரு சக்கர வாகனங்களும், கார்களும் மின்சார வாகனங்களாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் தேவையை புரிந்து கொண்ட முன்னணி கார் நிறுவனங்களும் மின்சார கார்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளன.

BMW i5 LWB முன்பதிவு தொடக்கம்:

உலகின் புகழ்பெற்ற கார் நிறுவனம் பிஎம்டபுள்யூ. இவர்கள் BMW i5 LWB என்ற மின்சார காரைத் தயாரித்துள்ளனர். இந்த காருக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஎம்டபுள்யூ-வின் டாப்கிளாஸ் தரத்திற்கு ஏற்ப இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த காரில் 81.6 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸ்ளூசிவ் ஃபர்ஸ்ட் எடிஷனாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த காரில் 99 கார்கள் மட்டுமே தற்போது விற்பனைக்கு வருகிறது. செடான் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 699 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த கார் 268 எச்பி குதிரைத் திறன் கொண்டது. 100 கிலோமீட்டர் வேகத்தை 6.7 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது.

சிறப்புகள்:

2,156 மி.மீட்டர் நீளமும், 1520 மி.மீட்டர் உயரமும் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 5 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம். வீல் பேஸ் 3 ஆயிரத்து 105 மி.மீட்டர் ஆகும். பொதுவாக மற்ற நிறுவனங்களின் கார்களை காட்டிலும் பிஎம்டபுள்யூ காரின் கேபின் வசதி மிகவும் அதிகளவிலும், வசீகரமாகவும், பல்வேறு சிறப்புகள் அடங்கிய வகையிலும் கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்த காரிலும் அதன் சிறப்புகள் இருக்கும் என்று கருதப்படுகிறது. 

விலை என்ன?

இந்த புதிய BMW i5 LWB காரின் விலை ரூபாய் 90 லட்சம் முதல் ரூபாய் 1 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. சொகுசு கார்கள் வாங்க விரும்புபவர்களின் விருப்பமாக இந்த கார் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த எஸ்யூவி காரில் முன்பக்கம் தங்க நிறத்திலான கிரில் கம்பிகள் பிஎம்டபுள்யூ-வின் கம்பீரத்தை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இது டிஆர்எல்எஸ் விளக்குகள் ஆகும். டைட்டானியம் வெண்கலத்தில் பம்பர் பொருத்தப்பட்டுள்ளது.

கேபின் வசதிகள்:

உட்புறம் ட்வின் டிஸ்ப்ளே செட்டப் செய்யப்பட்டுள்ளது. இந்த டேஷ்போர்டில் காரின் அனைத்து சிறப்புகள் பற்றிய தரவுகளும் உள்ளது. இந்த காரில் ஸ்டீயரிங்கின் கீழ்பக்கம் மட்டும் சமமாக இருக்கும் ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் பொருத்தப்பட்டுள்ளது. தோலால் ஆன இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. பின் இருக்கையில் அமர்பவர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் கால்களை நீட்டிக்கொள்ளும் அளவிற்கு இட வசதி உள்ளது.

ஓட்டுநர் டிஸ்ப்ளே 12.3 இன்ச் ஆகும். மற்றொரு டிஸ்ப்ளே 14.9 இன்ச் ஆகும். உயர்தர பாதுகாப்பு அம்சம் கொண்ட பிஎம்டபுள்யூ காரில் லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது. டயர் ப்ரஷர் மானிட்டரிங் வசதி, முன்பக்கமும், பின்பக்கமும் பார்க்கிங் சென்சார் வசதி, எலக்ட்ரானிக்  ப்ரோக்ராம் வசதி உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
பட்ஜெட் விலையில் எஸ்யூவி.. அறிமுகமாகியது Skoda Kylaq Sportline கார் - இவ்ளோ வசதிகளா?
பட்ஜெட் விலையில் எஸ்யூவி.. அறிமுகமாகியது Skoda Kylaq Sportline கார் - இவ்ளோ வசதிகளா?
Royal Enfield: பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயல் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயல் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!

Embed widget