TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
திமுக ஆட்சியில் காரை திருப்திபடுத்த கார் பந்தயம் நடத்தப்பட்டது என்று உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டின் எம்எல்ஏ-க்கள் தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்ளவும், ஆய்வு செய்யவும் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் கார் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் நேற்று முன்தினம் அறிவித்தார்.
எம்எல்ஏ-க்களுக்கு கார்:
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் தவெக அரசின் முடிவுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், அரசின் நிதிநிலை மோசமாக உள்ள சூழலில் இந்த அறிவிப்பு தேவையா? என்ற கேள்வியை ஒரு தரப்பினர் முன்வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் திமுக மற்றும் தவெக இடையே அனல் பறக்கும் விவாதம் நிகழ்ந்தது.
இந்த நிலையில், தவெக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த விவகாரத்தில் திமுக-வை விமர்சித்துப் பதிவிட்டுள்ளதாவது,
கார் பந்தயம்:
மக்களைப் பார்க்க MLA-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா? நீங்கள் பார்க்க கார் ரேஸ் நடத்தினால் நிதி நெருக்கடி இல்லையா? ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ திருப்திபடுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலைக் குறித்து தெரியவில்லையா? அல்லது அக்கறையில்லையா?
மக்களைப் பார்க்க MLA-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா?
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) August 21, 2026
நீங்கள் பார்க்க கார் ரேஸ் நடத்தினால் நிதி நெருக்கடி இல்லையா?
ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ திருப்தி படுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலைக் குறித்து தெரியவில்லையா? அல்லது… pic.twitter.com/YmMRISAthy
யாரைத் திருப்திப்படுத்த கார் ரேஸ்?
ஆனால், இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கார் அறிவித்தப்பின்தான் மாநிலத்தின் நிதிநெருக்கடி நினைவுக்கு வந்ததா? கார் பந்தயம் நடத்துவதற்கென்று ஏற்கனவே சென்னைக்கு அருகில் பிரத்யேக டிராக் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து முக்கியமான சாலைகளை சேதமடையச் செய்து அந்த பந்தயம் நடத்தியது யாரையோ திருப்திப்படுத்த தானே?! அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுற்றப்போது எங்கேச் சென்றது உங்கள் அக்கறை?
இரட்டை வேடம்:
கார் பந்தயம் நடத்தும்போது தெரியாத நிதிநெருக்கடி மக்கள் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு செலவு செய்யும்போது மட்டும் தெரிகிறதா? இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின்போது சென்னையில் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 நாட்களில் தீவுத்திடல் பகுதியைச் சுற்றில 3.5 கிலோமீட்டர் தொலைவிற்கு ஃபார்முலா ரேஸ் நடத்தப்பட்டது. சென்னையின் பிரதான சாலைகளில் நடத்தப்பட்ட இந்த கார் ரேசுக்கு பலரும் வரவேற்பை தெரிவித்தாலும், பிரதான சாலைகளில் நடத்தப்பட்ட இந்த கார் பந்தயத்தில் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சென்ற பலரும் மிகுந்த சிரமத்தை அப்போது எதிர்கொண்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















