மேலும் அறிய

Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

Sowcar Janaki Passes Away: 1950ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஷாவுக்காரு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சங்கரமஞ்சி ஜானகி. அந்த படத்தின் பெயர் இவரின் முன்னால் வந்து சௌகார் ஜானகியாக பிரபலமாக்கியது.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் காலமானார்.

94 வயதான அவர் இதயநோய் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சௌகார் ஜானகி மறைவு திரைத்துறையினர் இடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சௌகார் ஜானகியின் சினிமா பயணம்

1950ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஷாவுக்காரு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சங்கரமஞ்சி ஜானகி. அந்த படத்தின் பெயர் இவரின் முன்னால் வந்து சௌகார் ஜானகியாக பிரபலமாக்கியது. 

சௌகார் ஜானகி இந்திய திரையுலகில் 7 தலைமுறைகளாக நடித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400 படங்களில் நடித்துள்ளர். 1952ம் ஆண்டு தமிழில் வளையாபதி படம் மூலம் நடிகையாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் என அன்றைய முன்னணி நடிகர்கள் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். 3 ஆயிரத்துக்கும் அதிகமான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். 

கன்னட சினிமாவின் முதல் பான்-இந்திய படமாக அறியப்படும் மகிஷாசுர மர்த்தினி படத்தில் ராஜ்குமாருடன் இணைந்து நடித்தார். அஜித்துடன் தொடரும் என்ற படத்திலும், கிருஷ்ணாவுடன் வானவராயன், வல்லவராயன் படத்திலும், கார்த்தி நடித்த தம்பி படத்திலும்,  கடைசியாக தமிழில் சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்திலும் நடித்திருந்தார். 

தன்னுடைய சினிமா கேரியரில் பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், எதிர் நீச்சல், இரு கோடுகள், உயர்ந்த மனிதன், தில்லு முல்லு, வெற்றி விழா, பாமா விஜயம், தில்லு முல்லு, ஹேராம், சிவா என ஏகப்பட்ட படங்களில் நடித்தார். 

என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆர்,கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகிய நான்கு முதலமைச்சர்களுடனும் இணைந்து பணியாற்றிய இவருக்கு உண்டு. 2023ம் ஆண்டு தெலுங்கில் கடைசிப்படமாக அன்னி மஞ்சி சகுனமுலே படத்தில் சௌகார் ஜானகி நடித்திருந்தார். இவர் இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது 2022ம் ஆண்டு வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைமாமணி விருது, எம்ஜிஆர் விருது, சிறப்பு கலைமாமணி விருது, ஆந்திர அரசின் நந்தி விருதுகள், பிலிம்பேரின் வாழ்நாள் சாதனையாளர் விருது என பலவற்றையும் பெற்றுள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Embed widget