Watch Video | திருச்சி சாதனாவும், காத்து கருப்பின் கவுண்டமணி ரொமான்ஸும்.. ஹைப் அலப்பறை..
Sadhana media என்ற யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிடுவதை வாடிக்கையாக வருகிறார். இதற்கு 165 K சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்
மாலை நேர வெளிச்சத்தில் திருச்சி சாதனா மற்றும் காத்து கருப்பு கவுண்டமணி இருவரின் அலப்பறை ரொமான்ஸ் வீடியோ ஒன்று வைரலாகிறது. குறும்படத்துக்கான ரிஹர்சல்தான் இது. ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
தமிழகத்தில் டிக்டாக் மூலம் பிரபலமடைந்தவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் நன்மைகள் இருந்தாலும், ஒரு பக்கம் கைதாகும் அளவுக்கு குற்ற நடவடிக்கைகளும் அதிகரிக்கிறது. திருச்சி சாதனா,திவ்யா, ஜி.பி முத்து என பலர் இந்த வரிசையில் உள்ளார்கள். டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து என்ன செய்வது என்று புலம்பிய நிலையில் ஒவ்வொரு டிக் டாக் பிரபலங்களும் யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தங்களது வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் அனைவருக்கும் மிகவும் தெரிந்த நபர்களில் ஒருவர் தான் திருச்சி சாதனா.
டிக்டாக் தொடக்கத்தில் கிராமப்பெண்களிடம் இவ்வளவு நடித்திறமை உள்ளதா? என அனைவரையும் வியப்புடன் பார்க்க வைத்தவர்தான் திருச்சி சாதனா.. இதோடு இவரது வீடியோவைப்பார்க்கும் ஒவ்வொருவரும் அக்கா உங்களுக்கு சின்னத்திரை அல்லது வெள்ளித்திரையில் நல்ல எதிர்காலம் உள்ளது என்பது போன்ற பல கமென்ட்களையெல்லாம் தெறிக்க விட்டார்கள். இதோடு மட்டுமில்லாமல் பல நெகட்டிவ் கமெண்ட்களும் வந்தன. இருந்தபோதும் இவர் வீடியோக்கள் போடுவதை ஒருபோதும் நிறுத்தியது இல்லை. வீடியோவின் நோக்கம் சமூகத்துக்கு பயன்படுகிறதா, இல்லையா என்பதுதான் முக்கியமாக இருக்கவேண்டும் என அனைவரும் அறிவுறுத்துகிறார்கள்.
இதன் விளைவு தான் தற்போது திருச்சி சாதனாவை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. Sadhana media என்ற யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிட்டுவருகிறார். இதற்கு 165 k சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இந்த சேனலில் அவர் செய்யும் அனைத்து விஷயங்களையும் வீடியோவாக பதிவிட்டுவருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் காத்து கருப்பு கலையுடன்“ என்னம்மா கதை சொல்றான் பாருங்க நம்ம காத்து“ என்ற தலைப்பில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ முழுவதும் எப்படி ரொமான்ஸ் செய்வது போன்றது தான்.
ஆன்ட்டி…. என்னான்னு கேட்க மாட்டீங்களா? என கதை சொல்லி ஆரம்பிக்கும் போதே, ஏன் உடம்பு உதருது என கேட்பதோடு இந்த வீடியோ ஆரம்பமாகிறது. தம் தன தம் தன தாளம் வரும் என பாடல் வரிகளோடு இப்படித்தான் ரொமான்ஸ் செய்யணும் என கற்றுக்கொடுக்கிறார் சாதனா. ஆனால் காத்து கருப்பு கலை ரொமான்ஸ் வராதது போல நடித்ததோடு, சத்தியமாக எனக்கு இப்ப ரொமான்ஸே வரல என சொல்வதோடு அந்த குறும்பு படம் முடிவடைகிறது. இதனை யூடியூப் பார்த்த ரசிகர்கள் திருச்சி சாதானாவிற்கு பாராட்டுகளைக் குவித்தாலும், வழக்கம் போல பலர் கழுவி தான் ஊற்றியுள்ளனர்.