மேலும் அறிய

டோவினோ தாமஸ் நடிக்கும் 50வது படம் ARM.. வெளியான மிரட்டலான ட்ரைலர்!

டோவினோ தாமஸ் நடிக்கும் 50வது படமான ஏஆர்எம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

மின்னல் முரளி படத்தின் மூலம் தமிழில் பிரபலமடைந்த டோவினோ தாமஸ் நடிக்கும் 50வது படமான ஏஆர்எம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

டோவினோ தாமஸின் 50ஆவது திரைப்படம்:

"மின்னல் முரளி" மற்றும் "2018" ஆகிய படங்களின் மூலம் மலையாள சினிமா தாண்டி மற்ற மொழி ரசிகர்களிடமும் கவனத்தை ஈர்த்தார் டோவினோ தாமஸ். அவரின் அடுத்த படமான "ARM" ஒரு பான்-இந்தியா ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி உள்ளது. மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களின் கீழ் தயாராகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்கி உள்ளார்.

"ARM" படம் முழுக்க முழுக்க 3Dயில் தயாராகி, மலையாள சினிமா வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படமாக மாறி உள்ளது. இந்த படம் பற்றி அறிவிப்பு வெளியானதிலிருந்து, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 

இந்த படத்தில் இருந்து இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது புதிதாக வெளியிடப்பட்ட டிரெய்லர் படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

வெளியான மிரட்டல் ட்ரைலர்: இந்த ட்ரெய்லரில் பூமியை ஒரு எரியும் சிறுகோள் தாக்கி பெரிய வெடிப்பை ஏற்படுத்துகிறது. இந்த காட்சியுடன் ட்ரைலர் தொடங்கி ஒரு வயதான பெண்மணி மணியனின் கதையை சொல்கிறார். அதன்பிறகு படத்தில் உள்ள பல சுவாரஸ்ய காட்சிகள் ட்ரைலரில் இடம் பெற்றுள்ளது.

2 நிமிடம் 33 வினாடிகள் கொண்ட இந்த ட்ரைலரின் மூலம் "ARM" படம் 1900, 1950 மற்றும் 1990 ஆகிய காலகட்டங்களில் வடக்கு கேரளாவில் நடைபெறுகிறது என்பது நமக்கு புரிகிறது. டோவினோ தாமஸ் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். மணியன், குஞ்சிக்கெழு மற்றும் அஜயன் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

டிரெய்லரின் ஒவ்வொரு பிரேமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, கேரளாவின் செழுமையான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில் ஒரு காவிய கதையின் ஒரு தோற்றத்தை வழங்குகிறது. மேலும் "ARM" படத்தில் நிறைய அழுத்தமான காட்சிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. டோவினோ தாமஸ் தனது 50வது படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று பல புதிய முயற்சிகளை எடுத்து இருப்பது ட்ரைலர் பார்க்கும் போது நமக்கு தெரிகிறது.

பல அதிரடி காட்சிகளை கொண்டுள்ள இந்த படத்தை தியேட்டரில் காண ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். ஜோமோன் டி. ஜானின் அருமையான ஒளிப்பதிவு, "கந்தாரா" புகழ் விக்ரம் மூர் மற்றும் பீனிக்ஸ் பிரபு ஆகியோரின் சண்டைக்காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த  தஞ்சாவூர் மேயர்
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த தஞ்சாவூர் மேயர்
Harsha Sai: இவரா? பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Harsha Sai: இவரா? பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Drona Desai: ஒரே இன்னிங்சில் 498 ரன்கள்! யார் இந்த 18 வயது சிறுவன் த்ரோனா தேசாய்?
Drona Desai: ஒரே இன்னிங்சில் 498 ரன்கள்! யார் இந்த 18 வயது சிறுவன் த்ரோனா தேசாய்?
லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா? மேயர் பிரியாவின் தபேதார் மாதவி அதிரடி இடமாற்றம்- பின்னணி என்ன?
லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா? மேயர் பிரியாவின் தபேதார் மாதவி அதிரடி இடமாற்றம்- பின்னணி என்ன?
Embed widget