Year ender 2023 : ரஞ்சிதமே முதல் நெஞ்சமே வரை... லிரிக்ஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்த சூப்பர்ஹிட் பாடல்கள்...
Year ender 2023 : நடப்பாண்டில் மனதை கவரும் வரிகளால் ரசிகர்களை கவர்ந்த பாடல்கள் என்னென்ன?
2023ம் ஆண்டு திரைத்துறைக்கு பல வகையிலும் மிகவும் அற்புதமான ஆண்டாகவே அமைந்து இருந்தது. சோசியல் மீடியாவின் வளர்ச்சியும் அதற்கு பெரும் உறுதுணையாய் இருந்து வருகிறது. அந்த வகையில் யூடியூப் மூலம் திரைப்பட பாடல்கள் எளிதில் ட்ரெண்டிங்காகி வருகிறது. அப்படி 2023ம் ஆண்டு வெளியான ஏராளமான திரையிசை பாடல்கள் மில்லியன் கணக்கில் வியூஸ் பெற்று ரசிகர்களின் இதயங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தாலும் சில பாடல்கள் அதன் அருமையான வரிகளால் ரசிகர்களை கவர்ந்தது.
அப்படி 2023ம் ஆண்டில் வெளியான பாடல்களில் வரிகளால் ரசிகர்களை கவர்ந்த பாடல்களை பற்றி பார்க்கலாம்...
நெஞ்சமே நெஞ்சமே : ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 'மாமன்னன்' படத்தில் சக்திஸ்ரீ கோபாலன், விஜய் யேசுதாஸ் குரலில் ஒலித்த இந்த பாடல் அதிகமானோரை முணுமுணுக்க வைத்த பாடல்.
சின்னஞ்சிறு நிலவே : ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஹரிச்சரண் குரலில் இடம் பெற்ற இப்பாடல் காதலின் வலியை உணர்த்தியது.
நான் காலி : ஷான் ரோல்டன் இசையில் 'குட் நைட்' படத்தில் ஷான் ரோல்டன் கல்யாணி நாயர் குரலில் ஒலித்த இந்த பாடல்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த அருவி போல் அன்ப தருவாளே : சந்தோஷ் நாராயணன் இசையில் 'சித்தா' படத்தில் இடம்பெற்ற இப்பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் த்வானி கைலாஸ் இணைந்து பாடி இருந்தனர். அதிக அளவில் ரீல்ஸ் செய்யப்பட்ட பாடல்களில் ஒன்றாக இந்த ஆண்டின் சிறந்த பாடலாக அனைவரையும் கவர்ந்துவிட்டது.
நிரா நிரா : நிவாஸ் கே.பிரசன்னா இசையில் 'டக்கர்' படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் தான் பலரின் ரிங்க் டோனாக இருக்கிறது.
ஆராரிராரோ : தமன் இசையில் 'வாரிசு' படத்தில் சின்ன குயில் சித்ரா குரலில் ஒலித்த "ஆராரிராரோ கேட்குதம்மா..." பாடல் இன்றும் பலரின் தாலாட்டாக இருக்கிறது.
ரஞ்சிதமே ரஞ்சிதமே : தமன் இசையில் 'வாரிசு' படத்தில் நடிகர் விஜய் மற்றும் மானஸி குரலில் ஒலித்த இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இந்த ஆண்டின் மிகச்சிறந்த துள்ளல் பாடலாக இப்பாடல் அமைந்தது.
வண்ணார பேட்டையில : பரத் ஷங்கர் இசையில் 'மாவீரன்' படத்தில் இடம்பெற்ற இப்பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடி இருந்தனர். மிகவும் ஜாலியான இந்த பாடல் யூடியூப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என வைரலானது.
காவாலா : அனிருத் இசையில் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ஷில்பா ராவ் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இணைந்து படியிருந்தனர். தமன்னாவின் நடனமும், சூப்பர்ஸ்டாரின் ஸ்டைலும் இணைந்து மாஸ் காட்டிய இந்த தெறிக்கவிடும் பாடல் இன்று வரை ரிப்பீட் மோடில் ரசித்து வருகிறார்கள்.
வழிநெடுக காட்டுமல்லி : வெற்றிமாறனின் விடுதலை - 1 படத்தில் இசைஞானி இளையராஜா எழுதி பாடியிருந்த இப்பாடல் காதோடு வருடி சென்றது. பலரின் ரிங்க்டோனாக ஒலிக்கிறது.
வா மதுர அன்னக்கொடி : சந்தோஷ் நாராயணன் இசையில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடி இருந்தனர். அதிகமான ரீல்ஸ் செய்து இப்பாடல் இன்று வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
மைனரு வேட்டி கட்டி : சந்தோஷ் நாராயணன் இசையில் 'தசரா' படத்தில் இடம்பெற்ற இப்பாடலை அனிருத், தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடி இருந்தனர். இப்பாடல் வெளியான சமயத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எங்கு பார்த்தாலும் இப்பாடலை தான் முணுமுணுத்து கொண்டு இருந்தார்கள்.
நான் ரெடி தான் : அனிருத் இசையில் 'லியோ' படத்தில் நடிகர் விஜய் பாடிய இப்பாடல் உலகளவில் ட்ரெண்டிங்கானது. துள்ளல் ஜானரில் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.
ஹையோடா : அனிருத் இசையில் 'ஜவான்' படத்தில் இடம்பெற்ற இப்பாடலை அனிருத் ரவிசந்தர் மற்றும் பிரியா மாலி இணைந்து பாடி இருந்தனர்.